மணிப்பூரில் பத்திரிக்கை ஆசிரியர் சுட்டுக்கொலை
Subscribe to Oneindia Tamil
இம்பால்:
மணிப்பூரில் பிரபல ஆங்கிலப் பத்திரிக்கை ஆசிரியர் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். சகோல்பந்த் மெயினோ லெராக் பகுதியில்ஞாயிற்றுக்கிழமை இரவு இச் சம்பவம் நடந்தது.
இறந்த பத்திரிக்கை ஆசிரியரின் பெயர் டி.எச்.பிரஜாமணி சிங். 70 வயதான இவர் கடந்த 25 வருடங்களுக்கு முன் மணிப்பூர் நியூஸ் என்ற ஆங்கிலப் பத்திரிக்கையைத்தொடங்கி நடத்தி வந்தார்.
மணிப்பூர் மாநில பத்திரிக்கையாளர் சங்கத் தலைவராகவும் சிங் இருந்து வந்தார். ஞாயிற்றுக்கிழமை இரவு பணி முடிந்து வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில்சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவரைப் பின் தொடர்ந்து வந்த ஒரு கும்பல் அவரைத் துப்பாக்கியால் சுட்டுவிட்டு ஓடிவிட்டது. சம்பவ இடத்திலேயே சிங் இறந்தார்.
சம்பவ இடத்துற்கு விரைந்த வந்த போலீஸார் அங்கிருந்த இரண்டு துப்பாக்கிக் குண்டுகளைக் கைப்பற்றினர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications