கடலில் மூழ்கிய நீர்மூழ்கிக் கப்பலின் வெளிப்புறக் கதவு திறப்பு
மாஸ்கோ:
ஆர்க்டிக் கடல் பகுதியில் மூழ்கிய ரஷ்ய நீர்மூழ்கிக் கப்பலின் வெளிப்புறக் கதவுதிறக்கப்பட்டது. கப்பலுக்குள் இருப்பவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து தீவிரமாகமேற்கொள்ளப்பட்டுள்ளன.
ரஷ்ய கடற்படைக்குச் சொந்தமான குர்ஸ்க் என்ற நீர்மூழ்கிக் கப்பல் ஆர்க்டிக் கடல்பகுதியில் சென்று கொண்டிருந்தது. கப்பலுக்குள் 118 பேர் இருந்தனர்.
ஆகஸ்ட் 14-ம் தேதி திடீரென்று அக் கப்பல் மூழ்கத் தொடங்கியது. இந்த திடீர்மூழ்கலுக்குக் காரணம் என்னவென்று தெரியவில்லை.
சம்பவ இடத்துக்கு ரஷ்ய மீட்புக் குழுவினர் விரைந்து சென்றனர். கப்பலின முகப்புப்பகுதி கடுமையாக சேதமடைந்திருந்து. அதனால், எதிரே ஒரு வலுவான பொருள் மீதுகப்பல் மோதி விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என்று கருதப்பட்டது.
இந் நிலையில், ரஷ்ய மீட்புக் குழுவினருக்கு உதவியாக நார்வே மற்றும் பிரிட்டன்நாடுகளைச் சேர்ந்த மீட்புக் குழுவினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்புப்பணிகளில் ஈடுபட்டுள்ளன.
நார்வே நாட்டு மீட்புக் குழுவில் இருந்த கடலுக்குள் நீந்தி செல்லும் வீரர்கள்,திங்கள்கிழமை அதிகாலை கடலுக்குள் சென்று மூழ்கிய கப்பலை அடைந்தனர்.
கப்பலின் வெளிப் புறக் கதவை நீண்ட போராட்டத்துக்குப் பிறகு அவர்கள் திறந்துஉள்ளே சென்றனர். ஆனால், அங்கு முழுவதும் தண்ணீர் நிரம்பியுள்ளது. ஆட்கள்யாரும் இல்லை.
ஆட்கள் எல்லாம் உட்பகுதியில் இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இனி அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி மீட்புப் பணியினர் தீவிரஆலோசனை நடத்தி வருகின்றனர்.
கப்பலுக்குள் ஆக்ஸிஜன் அளவு குறைந்துவிட்டது. இதனால், அதனுள் இருப்பவர்கள்உயிருடன் இருப்பதற்கான வாய்ப்புகள் மிக மிகக் குறைவு என்று மீட்புப் படையினர்தெரிவித்தனர்.
தொடர்ந்து மீட்புப் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications