மஞ்சள் விலையை நிர்ணயிக்க உற்பத்தியாளர்கள் கோரிக்கை
கோவை:
மஞ்சள் விலையை குவிண்டால் ஒன்றிற்கு ரூ. 3 ஆயிரத்து 500 ஆக நிர்ணயிக்க வேண்டும் என ஈரோடு மஞ்சள் உற்பத்தியாளர்கள் நலச் சங்கம் கோரியுள்ளது.
ஈரோடு மஞ்சள் உற்பத்தியாளர்கள் நலச் சங்கச் செயலர் பி.எஸ் தங்கவேல் கூறியதாவது:
மஞ்சள் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளதால் விவசாயிகள் பெரும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் விவசாயிகள் ஏக்கர்ஒன்றிற்கு ரூ. 40 ஆயிரம் மதிப்புள்ள மஞ்சளை உற்பத்தி செய்து வந்தனர். தற்போது மஞ்சள் விலை வீழ்ச்சியடைந்துள்ளதால், விவசாயிகளுக்கு 15 ரூபாய்முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. குவிண்டால் ஒன்றிற்கு ரூ. 3 ஆயிரமாக விற்பனையான மஞ்சள், தற்போது ரூ. ஆயிரத்து700 ஆக குறைந்துள்ளது.
இதே போன்று கரும்புக்கு அரசின் விலை நிர்ணயம் ஏமாற்றம் அளிப்பதாகவே உள்ளது. ஏற்கனவே 8.5 சதவீத சர்க்கரை சத்துக் கொண்ட கரும்புக்குடன் ஒன்றிற்கு அரசு 740 விலை நிர்ணயம் செய்துள்ளது.
ஆனால், தற்போது 10 சதவீதம் சக்கரைச் சத்துள்ள கரும்புக்கு ஆயிரம் ரூபாய் விலை அறிவித்திருப்பது வெறும் கண்துடைப்பாகும். எனவே, இந்தஅறிவிப்பை அரசு மறு ஆய்வு செய்து 10 சதவீத சர்க்கரைச் சத்து என்பதை 8.5 சதவீதமாக குறைத்து டன் ஒன்றிற்கு ஆயிரம் ரூபாய் என கரும்புக்கு விலைநிர்ணயம் செய்ய வேண்டும் என்றார் தங்கவேல்.












Click it and Unblock the Notifications