சென்னையில் அரசு மருத்துவமனை கட்டிடம் இடிந்து விழந்து நோயாளி சாவு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையில் அரசு பொது மருத்துவமனைக் கட்டிடத்தின் ஒரு பகுதி ஞாயிற்றுக்கிழமை இரவு திடீரென்று இடிந்துவிழுந்தது. இதில் நோயாளி ஒருவர் பலியானார். இரண்டு டாக்டர்கள் உள்பட 9 பேர் படுகாயமடைந்தனர்.

அரசுப் பொது மருத்துவமனையில் முக்கிய பிரிவுகள் பழமை வாய்ந்த கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இந்தக்கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் 34 எச் வார்டு உள்ளது.

ஐந்து படுக்கைகள் கொண்ட இந்த வார்டில் டி.பி.நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த வார்டில் ஞாயிற்றுக்கிழமை இரவு 2 டாக்டர்கள், 5 ஊழியர்கள் 3 நோயாளிகள் இருந்தனர். இரவு சுமார் 7.30மணிக்கு மழை பெய்து கொண்டிருந்தது.

அப்போது இரண்டாவது மாடியில் இருந்த வார்டு பயங்கர சத்தத்துடன் இடிந்து விழுந்தது. இடிந்து விழுந்தஇடத்தில் இருந்த 10 பேரும் கட்டிட இடிபாடுகளில் சிக்கினர்.

இதையடுத்து பிற வார்டுகளில் இருந்த டாக்டர்கள், நோயாளிகள், மருத்துவமனை ஊழியர்கள் அனைவரும் அங்குவிரைந்தனர்.

உடனடியாகத் தீயணைப்பு வீரர்களுக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள்கட்டிட இடிபாடுகளில் சிக்கியிருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இடிந்து விழுந்த வார்டில் நோயாளி திருமூர்த்தி இடிபாடுகளில் சிக்கி அங்கேயே உயிரிழந்தார். அந்த வார்டில்இருந்த டாக்டர்கள் சிதம்பரம், வினோத் ஊழியர்கள் மோகன், நாராயணசாமி நாயுடு உள்பட மேலும் 5 பேர்படுகாயமடைந்தனர்.

பலத்த காயமடைந்த 9 பேருக்கும் அவசர சிகிச்சைப் பிரிவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அமைச்சர் விரைந்தார்:

சுகாதாரத்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி உடனடியாக மருத்துவமனைக்கு வந்து காயம் அடைந்தவர்களைசந்தித்து ஆறுதல் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+