சாப்ட்வேரும் கலாச்சாரமும்...
ஆ. காதர் கான்
வெறும் பண பலமும், அடிப்படைக் கட்டமைப்பும், மனித வளமும் மட்டும் எந்தத் துறையின் வளர்ச்சிக்கும்உதவாது என்பதை நன்றாகவே புரிந்து கொண்ட நாடுகள் மட்டுமே சாதனை படைத்திருக்கின்றன.
ஜப்பான், தென் கொரியா, சிங்கப்பூர், ஹாங்காங், தைவான், மலேசியா ஆகிய நாடுகள் ஐரோப்பிய நாடுகளுடன்ஒப்பிடுகையில் தொழில்துறையில் அந்த அளவுக்கு வளர்ச்சி அடைந்தவை அல்ல. ஆனால், இந்த நாடுகளின்பொருளாதாரம் தொழில்துறையில் மிக முன்னேறிய பல ஐரோப்பிய நாடுகளையும் மிஞ்சியிருக்கிறது.
இதற்கு இந்த ஆசிய நாடுகளின் அரசுகள் வகுத்த கொள்கைகள் தான் முக்கியக் காரணம்.
உள்நாட்டு நிறுவனங்களுக்கு ஊக்கம், அவற்றை சர்வதேச நிறுவனங்களுடன் மோதச் செய்தல், இந்தநிறுவனங்களுக்கு நிதி உள்பட அனைத்து உதவிகளையும் செய்தல், வலுவான தகவல் தொடர்பு வசதிகள்,தொழிலாளர்களுக்கு நல்ல பயிற்சி, சிறப்பான தகவல்-தொழில்நுட்பக் கொள்கை, போட்டியை சமாளிக்கும்வர்த்தகக் கொள்கைகள். இவை தான் மேலே குறிப்பிட்ட நாடுகளை உலகின் உச்சிக்கு அழைத்துச் சென்றமந்திரங்கள்.
சாப்ட்வேர் வளர்ச்சிக்கும் இது போன்ற சிறப்பான திட்டமிடலும் அதை அமலாக்கும் திறமையும் அவசியம். இதைச்செய்யும் நாடுகள் தான் வெற்றியைத் தொட முடியும். இதை நன்றாகவே புரிந்து வைத்திருக்கிறது தமிழகம். இதன்முதல்கட்டமாக 1997ம் ஆண்டில் தமிழக தொழில்துறையின் கட்டுப்பாட்டில் இருந்த ஐ.டி பிரிவை தனியாகப்பிரித்து தகவல்-தொழில்நுட்பத் துறையை உருவாக்கியது.
இந்தத் துறைக்கு நியமிக்கப்படும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சாப்ட்வேரில் தேறியவர்களாக, ஐ.டியை புரிந்துகொள்பவர்களாக இருப்பது மிக அவசியம். இந்தத் தேவையையும் தமிழகம் பூர்த்தி செய்திருக்கிறது. இந்தத்துறைக்கு அதிகாரிகளை மிக மிக யோசித்துத் தான் தேர்வு செய்கிறது அரசு.
இது தவிர தனியார் சாப்ட்வேர் நிறுவனங்களின் பெரிய தலைகள், அரசு அதிகாரிகள் அடங்கிய சிறப்புப்படையையும் உருவாக்கியிருக்கிறது தமிழகம்.
தமிழகத்துக்குள் தொழில் தொடங்க வரும் சாப்ட்வேர் துறையினருக்கு வழி காட்ட எல்காட், டிட்கோ, கைடன்ஸ்,டேசிட், சிப்காட் ஆகிய 5 பெரும் தொழில் கழகங்களிலும் தனித்தனி சிறப்புப் பிரிவுகள் உள்ளன.
இது தவிர தமிழ்நாட்டுக்கு வரும் ஐ.டி. துறையினருக்கு கொள்முதல் வரி ரத்து செய்யப்பட்டுள்ளது. தடையில்லாதமின் வினியோகத்தை உறுதி செய்துள்ளது. தனியாக ஐ.டி. பூங்கா அமைக்க முன் வரும் தனியாருக்கு நிலத்தைகையகப்படுத்த அரசே உதவும். இந்த பூங்காக்களுக்கும் அரசுப் பூங்காக்களுக்குத் தரப்படும் அதே மரியாதைதரப்படும்.
சாப்ட்வேர் நிறுவனங்கள் அமைக்க வாங்கப்படும் நிலத்துக்கு ஸ்டாம்ப் வரி கிடையாது. கான்ட்ராக்ட் சட்டப்படியும்எந்த வரியும் வசூலிக்கப்படாது. தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதியெல்லாம் சாப்ட்வேர்நிறுவனங்களுக்குத் தேவையில்லை.
தொழில்துறைக்கு அளிக்கப்படும் அனைத்து சலுகைகளும் சாப்ட்வேர் தொழில்துறைக்கும் முழுமையாகப்பொருந்தும் என்று சலுகைகளை வாரி வழங்கியிருக்கிறது தமிழ்நாடு. இதற்கு பலனும் கிடைக்க ஆரம்பித்துவிட்டது.
இதெல்லாம் சாப்ட்வேர் பூங்காவுக்குள் அமைக்கப்படும் ஐ.டி. நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும். ஆனால்,சாப்ட்வேர் பூங்காவுக்கு வெளியே ஒருவர் சாப்ட்வேர் நிறுவனத்தை அமைக்க வந்தால், அவருக்கு வழக்கமானபட்டா பிரச்சனையிலிருந்து, பல்வேறு துறைகளின் அனுமதி பெறுவது வரை பல சிக்கல்களும் இருப்பது உண்மைதான். இதையும் மீறித் தான் தமிழகத்தில் ஐ.டி வளர்ச்சியடைந்து வருகிறது.
அதே போல கல்வியறிவு பெற்றவர்கள் பெருமளவில் இருந்தாலும் காஸ்மோபாலிட்டன் கலாச்சாரத்தை தமிழகமக்கள் விரும்பியதில்லை. நமது தமிழ் கலாச்சாரத்தை கட்டிக்காக்க இது உதவி இருப்பது உண்மை தான். அதேநேரத்தில் இது நமக்கு எதிராகவும் வேலை செய்திருக்கிறது என்பதும் மறுக்க முடியாத உண்மை.
சர்வதேச அளவில் மிகச் சிறந்த கம்ப்யூட்டர் நிபுணர்களை நம்மால் தமிழகத்துக்கு இழுத்து வர முடியவில்லை.இதற்கு முக்கியக் காரணம் இந்த கலாச்சாரத் தடை தான்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications