மேலும் 20 பேரை விடுவிக்கச் சொல்கிறான் வீரப்பன்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

நடிகர் ராஜ்குமார் மற்றும் பிறரை விடுவிக்க வேண்டுமானால் கர்நாடகச் சிறைகளில்உள்ள மேலும் 20 பேரை விடுவிக்க வேண்டும் என்று சந்தனக் கடத்தல் வீரப்பன்கோரியுள்ளான்.

கடந்த 24 நாட்களாக ராஜ்குமார் உள்ளிட்ட ஐந்து பேரை வீரப்பன் பிடித்துவைத்துள்ளான். அவர்களை விடுவிப்பது தொடர்பாக நக்கீரன் பத்திரிகை ஆசிரியர்கோபால் ஒரு முறை காட்டுக்குச் சென்று வந்தார். தற்போது இரண்டாவது முறையாககாட்டுக்கு சென்றுள்ளார். அவருடன் நக்கீரன் செய்தியாளர்களும் சென்றுள்ளனர்.

தமிழக அரசுத் தரப்பில் தெரிவிக்கையில், கோபாலுடன் காட்டுக்குச் சென்ற பாலுஎன்பவர் தற்போது சென்னை திரும்பியுள்ளாகவும், அவர் மூலம் இந்த கோரிக்கைகுறித்துத் தெரிய வந்ததாகவும் கூறப்பட்டது. வீரப்பனின் புதிய கோரிக்கை குறித்துகர்நாட க அரசுடன் தமிழக அரசு ஆலோசித்தது. அப்போது வீரப்பன் கோரியுள்ளநபர்கள் யாரும் கர்நாடக சிறைகளில் இல்லை என கர்நாடகத் தரப்பில்தெரிவிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை மாலை பாலு சென்னை திரும்பினார். தற்போது கர்நாடக அரசின்பதிலுடன் பாலு புதன்கிழமை இரவு மீண்டும் காட்டுக்குச் செல்வார் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே வீரப்பன் விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் கருணாநிதியைச்சந்திப்பதற்காக ராஜ்குமாரின் மகன்கள் சிவராஜ்குமார், ராகவேந்திரா ராஜ்குமார் ஆகியஇருவரும் செவ்வாய்க்கிழமை சென்னை விரைந்தனர்.

ராஜ்குமார் மகன்களின் திடீர் பயணத்திற்கான காரணம் குறித்து எதுவும்தெரிவிக்கப்படவில்லை என்றாலும் கோபால் மற்றும் வீரப்பனுக்குமிடையிலானபேச்சுவார்த்தையில் சுணக்கம் ஏற்பட்டிருக்கலாம் என்று கர்நாடக அரசுத் தரப்பில்தெரிவிக்கப்பட்டது.

இழுபறி நீடிக்கிறது

தற்போதைய நிலையில், வீரப்பன் விவகாரம் மேலும் ஒரு வாரத்திற்கு இழுக்கும் என்றுதெரிகிறது. மைசூர் தடா கைதிகளை விடுவிப்பது தொடர்பான வழக்கில் அடுத்த கட்டவிசாரணை ஆகஸ்ட் 24-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதே நாளில் தீர்ப்புவழங்கப்படும் என்று கூற முடியாது. எனவே அதற்கு அடுத்த இரண்டு நாட்களில்தீர்ப்பு வந்தாலும் கூட, ஆகஸ்ட் 28-ம் தேதிக்குள் ராஜ்குமார் கடத்தல் நாடகம்முடிவுக்கு வரும் என்று கர்நாடகம் நம்புகிறது.

இந்த நிலையில், தடா கைதிகளை விடுவிப்பதை எதிர்த்து வீரப்பன் கும்பலால் சுட்டுக்கொல்லப்பட்ட கர்நாடக எஸ்.பி. ஷகீல் அகமதுவின் தந்தை அப்துல் கரீம்,உச்சநீதிமன்றத்திற்குத் தந்தி மனுவை அனுப்பியிருந்தார். இதுகுறித்துஉச்சநீதிமன்றத்திலிருந்து நோட்டீஸ் ஏதும் மாநில அரசுக்கு வரவில்லை என்று கர்நாடககாவல்துறை அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+