வீரப்பனின் புதிய கோரிக்கையுடன் கோபால் இன்று திரும்புகிறார்..?

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சந்தனக் கடத்தல் வீரப்பனின் புதிய கோரிக்கையுடன் நக்கீரன் கோபால் புதன்கிழமைஇரவு சென்னை திரும்புகிறார் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

கன்னட நடிகர் ராஜ்குமார் உள்பட 4 பேரை கடத்திச் சென்றுள்ள சந்தனக் கடத்தல்வீரப்பனிடமிருந்து 14 கோரிக்கைகள் வந்துள்ளன.

இவற்றுக்கான தமிழக மற்றும் கர்நாடக அரசுகளின் பதில்களுடன் அரசுத் தூதராகநக்கீரன் கோபால் வீரப்பனைச் சந்திக்க காட்டுக்குள் சென்றார்.

2-வது முறையாக காட்டுக்குள் சென்ற அவர் எளிதில் வீரப்பனைச் சந்திக்கமுடியவில்லை. மேலும் காட்டுப்பகுதியில் பலத்த மழையால் வீரப்பனை அவர்சந்திப்பதில் தாமதம் ஏற்பட்டது.

4 நாட்கள் கடும் முயற்சிக்குப் பிறகு வீரப்பனை கோபால் செவ்வாய்க்கிழமைசந்தித்துப் பேசினார்.

தான் வீரப்பனைச் சந்தித்தது குறித்து சென்னையில் உள்ள நக்கீரன் அலுவலகத்துக்குகோபால் தகவல் அனுப்பினார். ராஜ்குமார் நலமாக இருப்பதாகவும் கோபால்தெரிவித்தார்.

அத் தகவலை முதல்வர் கருணாநிதியிடம் நக்கீரன் இணை ஆசிரியர் காமராஜ்தெரிவித்தார். இதையடுத்து பெங்களூரில் இருந்த ராஜ்குமாரின் மகன்களை உடனேசென்னை புறப்பட்டு வரும்படி முதல்வர் தகவல் அனுப்பினார்.

இதையடுத்து ராஜ்குமாரின் மகன்கள் சிவராஜ்குமார், ராகவேந்திர ராஜ்குமார் இருவரும்செவ்வாய்க்கிழமை இரவு சென்னை வந்து சேர்ந்துள்ளனர்.

இதற்கிடையே வீரப்பனைச் சந்தித்த கோபால், பணயக் கைதியாக வைக்கப்பட்டுள்ளராஜ்குமார் உள்பட 4 பேரையும் விடுவிப்பது குறித்து பேசி வருகிறார்.

ஆனால், புதன்கிழமை இரவு அவர் சென்னை திரும்புகிறார் என்றும், அவருடன்ராஜ்குமாரோ மற்றவர்களோ யாரும் வரமாட்டார்கள். வீரப்பன் மேலும் சிலகோரிக்கைகளை விடுத்துள்ளார்.

அந்த கோரிக்கை மற்றும் கேஸட்டுகளுடன் மட்டுமே கோபால் வருகிறார் என்றும்நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+