பஹ்ரைன் விமான விபத்தில் இறந்தவர்களில் ஒருவர் இந்தியர்
துபாய்:
பஹ்ரைன் அருகே விபத்துக்குள்ளான கல்ஃப் ஏர் விமானத்தில் இறந்தவர்களில் இந்தியாவைச் சேர்ந்த இந்தர்ஜீத் கவுர் என்பவரும் ஒருவர் என்றுமனாமாவில் உள்ள இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.
கெய்ரோவிலிருந்து மனாமாவுக்குச் சென்று கொண்டிருந்த கல்ஃப் ஏர் விமானம் பஹ்ரைன் அருகே கடலில் புதன்கிழமை மாலை விழுந்து நொறுங்கியது.இதில் விமானத்தில் இருந்த 135 பயணிகளும், 8 விமானச் சிப்பந்திகளும் அடங்குவர்.
இறந்துபோன இந்த 8 விமானச் சிப்பந்திகளில் இந்தியாவைச் சேர்ந்த இந்திர்ஜீத் கவுரும் ஒருவர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் இவர் கல்ஃப் ஏர்விமான நிறுவனத்தில் சேர்ந்தார். விபத்துக்குள்ளான விமானத்தில் இவர் விமானப் பணிப்பெண்ணாக இருந்தார்.
இந்தர்ஜீத் கவுர் இறந்தது குறித்து இந்தியாவில் உள்ள அவரது பெற்றோருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை மாலை அவர்கள்பஹ்ரைன் வந்து மகளின் சடலத்தை அடையாளம் காட்டுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பின்னர் அனைத்து நடைமுறைச் சம்பிரதாயங்களும் முடித்துக் கொண்டு மகளின் சடலத்துடன் அவர்கள் இந்தியாவுக்கு சனிக்கிழமை திரும்புவார்கள் என்றுமனாமாவில் உள்ள இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications