சிறகடிக்க ஆசை: மீனா கர்ப்பத்தில் தெரிய வந்த அதிர்ச்சி விஷயம்! கோபத்தில் விஜயா.. முத்து எடுத்த நல்ல முடிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ஜூலை 16ஆம் தேதிக்கான எபிசோடில், முத்துமீனா வாழ்க்கையில் யாரும் எதிர் பார்க்காத ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. மீனா கர்ப்ப விஷயத்தில் ஒரு ரகசியம் தெரிய வந்திருக்கிறது. அதைக் கேட்டு விஜயா அதிர்ச்சி அடைகிறார். மறுபக்கத்தில் மனோஜ்க்கும் ஒரு நல்ல விஷயம் நடந்திருக்கிறது. என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.

சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய எபிசோடு

இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் மீனா கோச்சிங் கிளாசுக்கு வருகிறார். அங்கு ஸ்வேதா எல்லோருக்கும் இங்கிலீஷில் ஒரு எஸ்ஐ எழுதணும் என்று சொல்கிறார். எல்லோரும் எழுதுகின்றனர். அப்போது மிஸ்ராவும் கிளாசுக்கு வருகிறார். அவரிடமும் அதற்கான பெப்பர் கொடுக்கப்படுகிறது. பிறகு வெயில் அதிகமாக இருப்பதால் எல்லோருக்கும் மோர் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

Siragadikka Aasai serial Vijay TV

அந்த நேரத்தில் மோர் கொண்டு வந்தவர் அதை மிஸ்ரா மீது கொட்டி விடுகிறார். ஆனாலும் அவர் கோபப்படாமல் சரி விடுங்க என்று சமாதானம் சொல்கிறார். அதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த ஸ்வேதாவிற்கு மிஸ்ரா மீது நல்ல அபிப்பிராயம் ஏற்படுகிறது. பிறகு எல்லோரும் எழுதிய பேப்பரை கொடுத்துக் கொண்டிரக்கின்றனர். அந்த நேரத்தில் மீனாவுக்கு திடீரென வயிறு வலி வந்து விடுகிறது.

மீனாவுக்கு வயிறு வலி

உடனே அவரை ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போகின்றனர். அங்குதான் ஏற்கனவே சீதாவும் வேலை பார்ப்பதால் சீதாவும் டாக்டரிடம் சென்று மீனாவுக்கு என்ன ஆச்சு என்று விசாரித்துக் கொண்டிருக்கிறார். முத்துவுக்கு தகவல் சொன்னதும் முத்துவும் ஓடி வந்து என்னாச்சு என்று பதற்றத்துடன் காத்திருக்கிறார். பிறகு டாக்டர் மீனாவிடம் வயிற்றில் உங்களுக்கு ஏதாவது அடிபட்டதா? அல்லது ஏதாவது ரத்தக்காயம் வர மாதிரி குத்து ஏதாவது பட்டதா என்று கேட்கிறார்.

ஆமா எலக்சன்ல நிற்கிற சமயத்தில் சிந்தாமணியின் ஆட்கள் மீனாவை குத்திட்டாங்க என்று முத்து சொல்கிறார். அந்த சமயத்தில் வெளியே புண் சரியாகி இருந்தாலும் உள்ளே அது பிரச்சனையாகி இருக்கிறது. அது கர்ப்பப்பை வரைக்கும் பாதிச்சிருக்கு. இதனால் உங்களால் நார்மலாக குழந்தை பெற்றுக்கொள்ள முடியுமா? என்று என்பது கஷ்டம் தான் என்று சொன்னதும் மீனா அழுது கொண்டிருக்கிறார்.

Siragadikka Aasai serial Vijay TV

டாக்டர் சொன்ன விஷயம்

அடுத்த மாதம் ஒரு டாக்டர் வராங்க. அவங்களை வச்சு உங்களுக்கு ட்ரீட்மெண்ட் பார்க்கலாம் என்று டாக்டர் சொல்கின்றார். பிறகு வெளியே வந்த மீனா முத்து விடம் அப்போ எனக்கு குழந்தையே பிறக்காதா? நம்ம அப்பா அம்மா ஆக முடியாதா? என்று அழுது கொண்டிருக்க, முத்து மீனாவிற்கு ஆறுதல் சொல்கிறார்.

நடிகர் நாகேஷ் மகன் ஆனந்த் பாபுவின் புது அவதாரம்.. சன் டிவி சீரியல் ப்ரோமோவில் கவனித்தீர்களா? ரசிகர்கள் பாராட்டு
அடுத்ததாக வெளியே வந்து ஹாஸ்பிடல் வாசலில் நின்று எல்லோரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அந்த சமயத்தில் அந்த பக்கமாக விஜயா ஆட்டோவில் வருகிறார். அவர் ஸ்வேதா மீனாவிற்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருப்பதை பார்த்ததும் இவ கர்ப்பமாக இருக்கிறாளா? இவ இந்த ஹாஸ்பிட்டல்ல நிற்கிறாலே என்று மனதிற்குள் யோசித்துக் கொண்டிருக்கிறார்.

கோபத்தில் விஜயா

அப்போதே முத்து மீனாவை காரில் கூட்டிக்கொண்டு கிளம்பி விட, உடனே விஜயா சீதாவிடம் வந்து உங்க அக்கா கர்ப்பமா இருக்காளா? என்று கேட்கிறார். அதற்கு சீதா ஆமா எங்க அக்கா 13 மாதமாக கர்ப்பமாக இருக்கிறா என்று சொல்லி நக்கல் பண்ணுகிறார். பிறகு மீண்டும் மீண்டும் விஜயா கேட்டுக் கொண்டிருக்க அக்காவுக்கு வயிறு வலி அதனால் தான் வந்தா என்று சொன்னாலும் விஜயா நம்பாமல் கோபப்பட்டு திட்டிவிட்டு அங்கிருந்து போய் விடுகிறார்.

Siragadikka Aasai serial Vijay TV

மறுபக்கத்தில் மனோஜ் ஜோசியரிடம் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார். நீங்கள் சொன்னீங்க என்று கல்யாணமும் பண்ணிட்டேன். ஆனா அவங்க சொன்ன மாதிரி இன்னும் பணம் தரல. பணம் தராமல் ரோகிணி டைவர்ஸ் தர மாட்டா. இப்போ இந்த கல்யாண விஷயம் வெளியே தெரிஞ்சா கூட பிரச்சனை என்று புலம்பிக் கொண்டிருக்கும் சமயத்திலேயே கனகாவின் அம்மா அங்கே வருகிறார்.

சிறகடிக்க ஆசை: முத்துவிடம் சிக்கிய மனோஜ்.. விஜயாவுக்கு இந்த அவமானம் தேவையா? அண்ணாமலை பிடித்த பாயிண்ட்
கனகாவின் அம்மாவிடமும் மனோஜ் அதையே சொல்ல, அதற்கு அவர் நாளைக்கு நீங்க வீட்டுக்கு வாங்க. உங்களுக்கு பணத்தை தந்துவிடுகிறேன் என்று சொன்னது மனோஜ் சந்தோஷப்படுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது. நாளைக்கான எபிசோடில் தான் விஜயா மீனாவை என்ன பாடு படுத்தப் போகிறாரோ? தெரியவில்லை. என்ன நடக்கப் போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+