மெரீனா கரையோரம் கமகமக்கும் காபித் தீவுகள்"

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையில் பல இடங்களில் காபி தீவுகள்" பிரபலமடைந்து வருகின்றன.

பில்டர் காபிக்குப் பெயர் போனது தமிழகம். ஆனால் நிதானமாகவும், ஆற, அமரவும்உட்கார்ந்து பில்டர் காபி சாப்பிட இப்போது நேரமிருப்பதில்லை. அதிலும் சென்னைபோன்ற அவசர நகரங்களில் பில்டர் காபியைப் பற்றி நினைத்துப் பார்க்கவே நேரம்இருக்காது. பில்டர் காபியைப் போன்ற சுவையான வேறு காபியை சாப்பிட்டு நாக்கைசமாதானப்படுத்திக் கொள்ள வேண்டியதுதான்.

இப்போது நாக்கு மரத்துப் போன காபி சுவைஞர்களுக்கு தெம்பு அளிக்கும் விதத்தில்,புதிதாக காபி தீவுகள் வந்து கொண்டுள்ளன சென்னையில். அது என்ன காபி தீவுஎன்கிறீர்களா? தொடர்ந்து படியுங்களேன்...!

இத்தாலி நாட்டு காபி ஸ்டைல்தான் காபித் தீவுகள். இங்கு சுவையான காபி, எப்போதுவேண்டுமானாலும் சுடச் சுட கிடைக்கும். காபி, காபியைத் தவிர வேறு ஒன்றுமில்லைஇங்கே.

இந்தக் காபித் தீவுகளுக்கு குய்க்கி பப்ஸ் என்று பெயர். நகரின் முக்கிய ஸ்பாட்களில்இவை அமைக்கப்பட்டுள்ளன. டிபார்ட்மென்ட் ஸ்டோர்கள், புத்தக நிலையங்கள், தீம்பார்க்குகள், பொழுதுபோக்கு மையங்கள் ஆகிய இடங்களில் இந்தக் காபித் தீவுகள்கமகமத்துக் கொண்டுள்ளன.

ப்ரூ, சன்ரைஸ் என இந்தியப் புகழ் பெற்ற காபியை மட்டுமே பார்த்துப் பழகிப் போனநமது நாக்குகள் இனிமேல், உலகப் புகழ் பெற்ற பிரையசோ, டியாம்பரா, இக்லு ஆகியகாபியையும் சுவைக்கலாம். வயசு வித்தியாசம் இல்லாமல் சென்னைவாசிகளை இந்தகாபி வகையறாக்கள் வளைத்துப் போட்டுக் கொண்டுள்ளன.

சசி சிமலா என்பவர் இந்தக் காபித் தீவுகளை அமைப்பதற்காக அமெரிக்காவிலுள்ளதனது எலக்ட்ரானிக் பிசினஸை மூடி விட்டு சென்னை வந்து விட்டார். இவருக்குச்சொந்த ஊர் ஆந்திராவில் உள்ளது. வந்தாரை வாழ வக்ைகும் தமிழகத்தின் தலைநகரில்இப்போது காபித் தீவு அமைத்து கலக்கி வருகிறார்.

சிமலா கூறுகையில், இந்த ஆண்டின் இறுதியில், மொத்தம் 12 குய்க்கி பப்களைத்திறக்கத் திட்டமிட்டுள்ளேம். இவற்றில் சென்னையில் செப்டம்பர் 30-ம் தேதி மற்றொருபப் திறக்கத் திட்டமிட்டுள்ளோம்.

ஏற்கனவே செகந்திராபாத்தில் இத்தகைய குய்க்கி காபி பப் உள்ளது. பாண்டிச்சேரியில்செப்டம்பர் 15-ம் தேதி ஒரு காபி பப் திறக்கவுள்ளோம்.

இதற்குப் பிறகு மும்பை, டெல்லி, புனே நகரங்களில் காபி தீவுகள் அமைக்கத்திட்டமிட்டுள்ளோம். சீனாவிலும் காபியைக் கொண்டு செல்லும் எண்ணம் உள்ளது.இது தவிர இலங்கைத் தலைநகர் கொழும்புவிலும் காபித் தீவு அமைக்கும் நோக்கம்இருக்கிறது என்றார் சசி.

இந்த ஆண்டு இறுதிக்குள் 10 முதல் 12 காபி பப்கள் மற்றும் பத்து காபித் தீவுகளைஅமைக்க குய்க்கி முடிவு செய்துள்ளது. இரண்டு ஆண்டுகளில் மொத்தம் 55 காபிதீவுகள் மற்றும் காபி பப்களை அமைக்கவும் குய்க்கி முடிவு செய்துள்ளது.

யு.என்.ஐ

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+