இந்தியக் கம்ப்யூட்டர் என்ஜீனியர்களை அழைக்கிறது பிரான்ஸ்

Subscribe to Oneindia Tamil

பாரீஸ்:

இந்தியக் கம்ப்யூட்டர் நிபுணர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க பிரான்ஸ் முன்வந்துள்ளது.

இந்திய, பிரான்ஸ் சென்டரின் கூட்டம் அக்டோபர் மாதம் பிரான்ஸ் தலைநகர் பாரீசில்வரும் அக்டோபர் மாதம் நடைபெறவுள்ளது. இக் கூட்டத்தில் இந்தியாவில் உள்ளகம்யூட்டர் நிபுணர்களுக்கு பிரான்சில் உள்ள வேலை வாய்ப்பு குறித்துபேசப்படவுள்ளது.

இது தவிர, உயிரித் தொழில்நுட்பம், மருத்துவக் கல்வித் துறைகளிலும் பிரான்சின்ஒத்துழைப்பை அதிகப்படுத்துவது பற்றிய ஆய்வும் நடைபெறும்.

இம் மையத்தின் இணைத் தலைவராக உள்ள முன்னாள் கர்நாடக முதல்வர்ராமகிருஷ்ண ஹெக்டே, பிரான்ஸ் தரப்பில் இணைத் தலைவர் ழான் பிரான், சுவாபோன்சே இருவரும் செவ்வாய்க்கிழமை பாரீசில் பேச்சு வார்த்தை நடத்தி, மையத்தின்அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவாதித்து முடிவு செய்தனர்.

ஹைதராபாத்தில் நவம்பரில் நடைபெறவிருக்கும் தொழில் நுட்ப உச்சி மாநாட்டில்பிரான்ஸ் முக்கியப் பங்காற்றவுள்ளது. இந்த மாநாட்டில் 50 பிரென்சு நிறுவனங்கள்கலந்து கொள்ளவுள்ளன. இது குறித்து விவாதிப்பதற்காக பிரான்ஸ் குழு அடுத்த மாதம்இந்தியா வருகிறது.

பிரான்ஸ் நிறுவனங்கள் இந்திய நிறுவனங்களுடன் கூட்டு வர்த்தகம் செய்யவிரும்புகின்றன. பிரான்ஸ் தொழிலதிபர்கள் இந்திய கம்ப்யூட்டர் நிபுணர்களைபணிக்கு அமர்த்த விரும்புகின்றனர். தற்போது பிரான்சுக்கு 10,000 கம்ப்யுட்டர்நிபுணர்கள் தேவை என்ற நிலை உள்ளது.

அடுத்த மாதம் மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் பிரான்ஸ் செல்லவிருக்கிறார்.அப்போது இது குறித்து விரிவாக விவாதிக்கப்படும்.

இந்தஆண்டு இறுதியில் சென்னையில் எய்ட்ஸ் தடுப்பு மாநாடு நடைபெற உள்ளது.இதில் பிரான்ஸ் மருத்துவர்கள் கலந்து கொள்கின்றனர்.

பிரான்சுக்கு விசா எளிதில் கிடைப்பதில்லை என்பது குறித்து பிரான்ஸ்மையக்கூட்டத்தில் எடுத்துக் கூறப்பட்டது. இதுகுறித்தும் அடுத்த கூட்டத்தில்பேசப்படும் என்று தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+