நெட்வொர்க்கிங் மையம் அமைக்கிறது மகாலிங்கம் பொறியியல் கல்லூரி
பொள்ளாச்சி:
அக்ஸல் கம்ப்யூட்டர் நிறுவனத்துடன் டாக்டர் மகாலிங்கம் பொறியியல் கல்லூரி ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் பொள்ளாச்சியில் உள்ள மகாலிங்கம் பொறியியல் கல்லூரி வளாகத்துக்குள் கம்ப்யூட்டர் ஹார்டுவேர் சர்வீஸ் மற்றும்நெட்வொர்க்கிங் மையம் அமைக்கப்படும்.
வெள்ளிக்கிழமை நடந்த ஒப்பந்தம் கையெழுத்து நிகழ்ச்சிக்குப் பிறகு அக்ஸல் நிறுவனத் தலைவர் பணிக்கர் கூறியதாவது:
தற்போது கம்ப்யூட்டர் சாப்ட்வேர் தொழில்நுட்பத்துக்குத்தான் நாட்டில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. ஹார்டுவேர் தொழில்நுட்பத்துக்கும்அதே அளவு முக்கியத்துவம் கொடுக்கவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
100 சாப்ட்வேர் பொறியாளர்கள் இருந்தால் அங்கு ஒரு ஹார்ட்வேரில் பயிற்சி பெற்ற தொழில்நுட்பப் பொறியாளரின் தேவை அவசியமாக உள்ளது. அந்தவகையில் ஹார்டுவேர் தொழில்நுட்பத்தில் அக்ஸல் நிறுவனம் கடந்த 10 ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறது.
2008-ம் ஆண்டில் இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் தொழில் வளர்ச்சி 3.52 லட்சம் கோடியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அப்போது கம்ப்யூட்டர் துறையில் சாப்ட்வேர் மற்றும் ஹார்ட்வேர் பிரிவுகளில் பயிற்சி பெற்றவர்களின் தேவை அதிகமாக இருக்கும்.
இப்போது செய்து கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் மூலம் மகாலிங்கம் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு ஹார்டுவேர் பயிற்சி அளிக்கப்படும்.பயிற்சிக்குப் பிறகு அளிக்கப்படும் சான்றிதழ் உலகம் முழுவதும் ஏற்றுக் கொள்ளப்படும் வகையில் இருக்கும் என்றார் பணிக்கர்.
யு.என்.ஐ.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications