For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

முக்கால் கிணறு தாண்டிவிட்டோம் என்கிறார் நக்கீரன் கோபால்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

வீரப்பனை இரண்டாவது முறையாக காட்டுக்குள் சந்தித்துவிட்டு சென்னை திரும்பிய அரசு தூதர் நக்கீரன் ஆசிரியர் கோபால் சனிக்கிழமைமாலை பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், முக்கால் கிணறு தாண்டிவிட்டோம், இன்னும் இருபத்தைந்து சதவீதம் தாண்டவேண்டியிருக்கிறது என்றார்.அவர் தொடர்ந்து கூறுகையில்,

இந்த முறை, கடந்தமுறையை விட வீரப்பனின் அணுகுறையில் நிறைய மாற்றங்கள் இருந்தன. எங்களை வரவேற்றதே வீரப்பன் தான்.காட்டிற்குள் சிறிது தூரம் அழைத்துச்சென்றவன், தீடீரென்று என்ன பேட்டி எடுக்கணுமா இங்கேயே எடுத்துக்கோ, நீ கிளம்பு என்றான்தீடீரென்று.

இல்லை நான் ராஜ்குமாரை பார்த்துவிட்டுத்தான் செல்ல முடியும் என்றேன். அப்ப நாலு நாள் நடக்கணும்.நடப்பியா..செத்துப்போயிடுவ..சாகறதுக்கு தயார்னா நடந்துவான்னான்.

உங்களுடைய கோரிக்கைகளுக்கு, அரசு விளக்கம் கொடுத்திருக்கு, அதோட வந்திருக்கேன் என்று அதையும் அரசு கொடுத்தனுப்பியகோரிக்கை விளக்கங்கள், ஆவணங்களை காட்டிவிட்டு, ராஜ்குமாரை இங்கிருந்து அழைத்துப்போகவே வந்தேன் என்றேன்.

மிகவும் கடினமான பாதைகள். பெரிய பெரிய முட்கள். நடப்பதற்கு மிகவும் சிரமாகவே இருந்தது.

வீரப்பனிடம் ஒரு மணி நேரம், ராஜ்குமாரிடம் அரைமணி நேரம் பேசினேன். அதை கேஸட்டில் பதிவும் செய்திருக்கிறோம். அரசு கொடுத்தவிளக்கங்கள் பற்றி வாக்குவாதம் செய்தான். 14 கோரிக்கைகளில் 12 கோரிக்கைகளை ஒப்புக்கொண்டு விட்டான். இரண்டு கோரிக்களைஉடனே அமல்படுத்த வேண்டும் என்று வற்புறுத்தினான்.

இரண்டு கோரிக்கைகள் என்பது இன்று காலை தமிழக கர்நாடக முதல்வர்கள் தெரிவித்தது. 1992- 1993 வருடம் அதிரடிப்படைகளால்பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி.( இதற்குத்தான் இரண்டு மாநில அரசும் தலா ஐந்து கோடிரூபாய் ஒதுக்கியிருக்கிறது).

இது தவிர, தடா வழக்குகளில் பாதிக்கப்பட்டிருக்கும் 121 மீதுள்ள வழக்குகள் அனைத்தும் வாபஸ் பெற வேண்டும் என்பது. இதில் ஒருவிஷயம் இருக்கிறது. வீரப்பன் விவகாரத்தினால் பிடிபட்டவர்கள் மொத்தம் 124 பேர். இவர்கள் மீது தடா மற்றும் பல்வேறு வழக்குகள்இருக்கிறது.

வீரப்பனும் முதலில் 51 பேர்தான் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றே நினைத்திருந்தானாம்.

இந்த தடா கைதிகளுக்காக போராடும் ஒரு இயக்கத்தைச் சேர்ந்த பிரகர் ஒருவர் பி.பி.சி வானொலியில் பேட்டி கொடுக்க அதன் பிறகேவீரப்பனுக்கு தன்னால் பாதிக்கப்பட்டவர்கள் கர்நாடக சிறையில் உள்ளவர்கள் மட்டுமல்ல, இன்னும் பலர் இருக்கிறார்கள். 124 பேரில்மூன்று பேர் இறந்துவிட்டார்கள்.

கர்நாடக சிறையில் 51 பேர் இருக்கிறார்கள், மீதள்ள 70 பேர் ஜாமீனில் தான் இருக்கிறார்கள். அவர்கள் ராமாபுரம் காவல்நிலையத்தில்கையெழுத்து போட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்கிற விபரம் தெரிந்து, இவர்கள் அனைவர் மீதுள்ள வழக்குகள் அனைத்தும் வாபஸ் பெறவேண்டும் என்று வீரப்பன் சொன்னான்.

121 பேரை விடுதலை செய்வது, சின்னாம்பதி, வாச்சாதி ( அதிரடிப்படையினரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதி) இந்த இரண்டுகோரிக்கைகளும் உடனே நிறைவேற்றப்படவேண்டும் என்கிறான் வீரப்பன்.

வீரப்பனுடன் எத்தனை தீவிரவாத குழுக்கள் இருக்கின்றன?

வீரப்பனே தன்னையும் தன்னுடன் உள்ளவர்களையும் ஒரு தீவிரவாத குழு என்றும் , வீரப்பனுடன் தமிழ்நாடு விடுதலைப்படை, தமிழர்மீட்புப்படையும் இருப்பதாக கூறினான்.

மொத்தம் எத்தனை பேர் அங்கே இருக்கிறார்கள்?

நான் பார்த்ததில் வீரப்பனைச்சசுற்றி மொத்தம் ஒன்பது பேர் இருக்கிறார்கள்.

தமிழ்நாடு விடுதலைப்படை தலைவன் மாறனை சந்தித்தீர்களா?

சந்தித்தேன்..மாறனிடம் பேசினேன். வீரப்பன் சொன்ன இரண்டு கோரிக்கைகளையும் அரசு நிறைவேற்றினால் மறுபடியும் காட்டிற்கு வாஇல்லைன்னா மறுபடியும் காட்டுக்கு வராதே என்று தான் என்னை அனுப்பி வைத்தார்கள்.

இரண்டு கோரிக்கைகளுக்கு அரசு கொடுக்கும் பதிலுடன் 28-ம் தேதி காட்டிற்கு செல்கிறேன். இந்த இரண்டு கோரிக்கைகளையும் அரசுநிறைவேற்றினால் தான், ராஜ்குமாரை மீட்க முடியும். இது பற்றி இரு மாநில முதல்வர்களிடம் சொன்னேன்.

அவர்களும் சரி என்றிருக்கிறார்கள். 28-ம் தேதிக்குள் முடிவைச் சொல்வார்கள். அதன் படி மறுபடியும் காட்டிற்குச் செல்கிறேன் எனறார்கோபால்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X