59 ஆண்டுகளுக்கு பின்.. தமிழக அமைச்சரவையில் இணைந்த காங்கிரஸ்.. 2 இடங்களை ஒதுக்கிய விஜய்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: 59 ஆண்டுகளுக்கு பின் தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களுக்கு இடம் கொடுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ-க்களான ராஜேஷ் குமார் மற்றும் விஸ்வநாதன் ஆகிய இருவரும் அமைச்சராக நாளை பொறுப்பேற்க உள்ளனர். தமிழக மக்களின் விருப்பங்கள், எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சட்டசபைத் தேர்தலில் 108 இடங்களில் வென்று தவெக ஆட்சியில் அமர்ந்துள்ளது. தேர்தலுக்கு பின் திமுக உடனான கூட்டணியை முறித்துக் கொண்ட காங்கிரஸ் கட்சி உடனடியாக தவெகவுடன் கைகோர்த்தது. காங்கிரஸ் கட்சியின் 5 எம்எல்ஏ-க்களும் தவெகவுக்கு ஆதரவு அளிப்பதாக அறிவிக்கப்பட்டது. இதன்பின் சிபிஐ, சிபிஎம், விசிக மற்றும் ஐயூஎம்எல் ஆகிய கட்சிகள் தவெகவுக்கு வெளியில் இருந்து ஆதரவு என்று அறிவித்தனர்.

Rahul Gandhi

இதன் மூலமாக காங்கிரஸ் கட்சி தமிழக அமைச்சரவையில் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டது. மே 10ஆம் தேதி விஜய் முதல்வராக பொறுப்பேற்ற போது அவருடன் சேர்ந்து 9 பேர் அமைச்சராக பொறுப்பேற்றனர். அவர்களுக்கு ஒரு வாரம் கழித்து இலாகா ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிலையில் நாளை தமிழக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.

அதன்படி 59 ஆண்டுகளுக்கு பின் தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சிக்கு இடம் கிடைத்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ-க்களான ராஜேஷ் குமார் மற்றும் விஸ்வநாதன் ஆகிய இருவரும் நாளை அமைச்சர்களாக பொறுப்பேற்க உள்ளனர். இதற்கு காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் மூத்த தலைவர் ராகுல் காந்தி ஆகிய இருவரும் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக ராகுல் காந்தி, மக்களின் எதிர்பார்ப்புகளையும் நம்பிக்கையையும் காங்கிரஸ் கட்சியின் 2 அமைச்சர்களும் காப்பாற்ற வேண்டும் என்று வாழ்த்தி இருக்கிறார். இதனால் காங்கிரஸ் கட்சியினர் உற்சாகம் அடைந்துள்ளனர். இதன் மூலமாக தென் மாநிலங்களில் கர்நாடகா, தெலங்கானா, கேரளா ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி நேரடியாக ஆட்சி செய்கிறது.

தமிழ்நாட்டில் தவெக - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. ஆந்திரா மற்றும் புதுச்சேரியில் மட்டுமே காங்கிரஸ் கட்சி ஆட்சி அதிகாரத்தில் இல்லை. இதன் மூலமாக தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி புத்துயிர் பெற்றுள்ளதாக பார்க்கப்படுகிறது. மேலும் காங்கிரஸ் கட்சியில் ராஜேஷ் குமாருக்கு சுற்றுலா துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சியில் காங்கிரஸ் கட்சி இணைந்துள்ளதன் மூலமாக, தென் இந்தியாவில் காங்கிரஸ் கட்சியின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. கர்நாடகா, தெலங்கானா மற்றும் கேரளாவில் காங்கிரஸ் கட்சி நேரடியாக ஆட்சியில் அமர்ந்துள்ளது. தற்போது தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி கூட்டணி ஆட்சியில் இணைந்திருக்கிறது. இதனால் வட இந்தியாவில் பாஜக ஆதிக்கம் செய்வதை போல், தென்னிந்தியாவில் காங்கிரஸ் ஆதிக்கம் செய்வதாக பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+