மதுரை சாலை விபத்தில் 5 பேர் சாவு
Subscribe to Oneindia Tamil
மதுரை:
மதுரை அருகே அரசுக்குச் சொந்தமான பஸ்ஸும், ஜீப்பும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் ஜீப்பில் பயணம் செய்த 5 பேர் இறந்தனர். ஒருவர் பலத்தகாயமடைந்தார்.
மதுரை-ராஜபாளையும் நெடுஞ்சாலையில் அம்மாபட்டி அருகே வெள்ளிக்கிழமை இவ் விபத்து நடந்தது. விபத்தில் இறந்தவர்களில் திருநெல்வேலிமாவட்டம், நீலகாட்டுச்சேவல் கிராம பஞ்சாயத்துத் தலைவரும் அடங்குவார்.
டிராக்டருக்கான உதிரி பாகங்கள் வாங்குவதற்காக பஞ்சாயத்துத் தலைவர் உள்பட 6 பேர் ஜீப்பில் வந்து கொண்டிருந்தபோது இவ் விபத்து நடந்தது. விபத்தில்காயமடைந்த ஒருவர் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
விபத்தில் ஜீப் முழுமையாக சேதமடைந்துவிட்டதாகப் போலீஸார் தெரிவித்தனர். மதுரை புறநகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications