மருத்துவ முகாம்கள் நடத்துகிறது அதிமுக
சென்னை:
அ.திமு.க சார்பில் 10 ஊர்களில் இலவச மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகின்றன.
செப்டம்பர் 9ம் தேதி முதல் 21ம் தேதி வரை இம்முகாம்கள் நடைபெறுகின்றன என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இதுகுறித்து ஜெயலலிதா சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
அ.தி.மு.க. நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆரின் 83-வது பிறந்த நாளையொட்டி கட்சியின் மருத்துவ அணியின் சார்பில் "மக்கள் நல இலவச மருத்துவமுகாம்கள்கடந்த ஜனவரி மாதம் முதல் நடைபெற்று வருகின்றன.
இந்த மருத்துவ முகாம்களில் பல்வேறு மருத்துவ நிபுணர்களைக் கொண்ட குழு, அனைத்து மக்களுக்கும் ஒரு முழுமையான மருத்துவப் பரிசோதனையும்,ஆலோசனையும் வழங்கி வருகிறது.
இதன் தொடர்ச்சியாக 10 நாடாளுமன்றத் தொகுதிகளுக்குட்பட்ட சட்டமன்றத் தொகுதிகளில் செப்டம்பர் 9-ம் தேதி முதல் அக்டோபர் 21ம் தேதி வரைஇலவச மருத்துவ முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
9-ம் தேதி கும்பகோணம், 10-ம் தேதி கிருஷ்ணராயபுரம், 23-ம் தேதி ஆண்டிப்பட்டி, 24-ம் தேதி அருப்புக்கோட்டை, 30-ம் தேதி திருவள்ளூர்,அக்டோபர் 7-ம் தேதி தாரமங்கலம், 8-ம் தேதி கோவை மேற்கு, 14-ம் தேதி நன்னிலம், 15-ம் தேதி திண்டிவனம், 21-ம் தேதி ராதாபுரம்ஆகிய ஊர்களில் மருத்துவ முகாம்கள் நடைபெறும்.
மருத்துவ அணியின் தலைவர் டாக்டர் மைத்ரேயன் தலைமையிலும், செயலாளர் டாக்டர் வேணுகோபால் முன்னிலையிலும் இவை நடைபெறும்.
இம்முகாம்களுக்கு கட்சியினர் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications