இந்தியாவின் பலவீனத்தைப் பயன்படுத்துகிறது ஐ.எஸ்.ஐ.... ராணுவத் தளபதிமாலிக்

Subscribe to Oneindia Tamil

விஜடெல்லி:

உள்நாட்டுப் பிரச்சினைகளுக்கு ராணுவத்தைப் பயன்படுத்துவதை மாநிலங்கள் நிறுத்திக் கொள்ளவேண்டும். அத்தகைய நடவடிக்கைகள் ராணுவ அமைப்பையைசீர்குலைத்துவிடும் என்று இந்திய ராணுவத் தளபதி வி.பி. மாலிக் தெரிவித்தார்.

செப்டம்பர் 30-ம் தேதி ஓய்வு பெற உள்ள அவர் அளித்த பேட்டி:

இந்தியாவை பலவீனப்படுத்த பல்வேறு முயற்சிகளை பாகிஸ்தான் மேற்கொண்டது. முதலில் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட்டது. பின்னர் நாட்டுமக்களிடையே உள்ள இன, மத ஒருமைப்பாட்டை குலைக்க முயன்றது. இறுதியாக ஊழலையும் புகுத்திவிட்டது.

இந்தியாவைப் பொறுத்தவரை இப்போதைய தேவை என்னவென்றால் தேசிய பாதுகாப்பு பற்றி கருத்தொற்றுமை உருவாகவேண்டும் என்பதுதான்.

நாட்டை வலுப்படுத்தவும், நாட்டுக்குள் அன்னிய சக்திகள் புகாமல் இருக்கவும் மூன்று கட்ட நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ள வேண்டியுள்ளது.

முதலாவது, மக்களுடைய பிரச்சினைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கவேண்டும். அப்போதுதான் நாட்டுக்குள் அன்னிய சக்திகள் ஊடுருவ முடியாது. அடுத்துசிறந்த புலனாய்வு, ஒருமைப்பாடு ஆகியவற்றின் மூலம் உள்நாட்டிலும், எல்லைப் பகுதியிலும் தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடவேண்டும்.

மூன்றாவது, தனது வெளிநாட்டுக் கொள்கை பற்றி சரியான தகவல்களைப் பாகிஸ்தானுக்கு இந்தியா தெரிவிக்கவேண்டும். மேலும், பாகிஸ்தான் ஒருபயங்கரவாத நாடும் என்றும் உலக நன்மைக்காக அது ஒன்றும் செய்யவில்லை என்றும் உலக சமுதாயத்துக்கு எடுத்துரைக்கவேண்டும்.

இந்த மூன்றும்தான் இப்போது முதற்பணியாக இந்தியா செய்யவேண்டியது. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே மறைமுகப் போர் நிலவுகிறதுஎன்பதை என்னால் இப்போது சொல்லமுடியும்.

இப்போதுள்ள நிலையில் இந்தியாவும், பாகிஸ்தானும் அணு ஆயுத பலத்தில் சமமாக இருப்பதாகவே கருதுகிறேன். நம் நாட்டைப் பொறுத்தவரை நமது அணுஆயுதம் தொடர்பான கொள்கை வேறானது.

ஆனால், பாகிஸ்தானைப் பொறுத்தவரை பட்டன் ஒருவரிடம்தான் உள்ளது. அணு ஆயுதத்தைப் பாகிஸ்தான் பயன்படுத்தினால், இந்தியாவும் பயன்படுத்தும்.

தற்போதுள்ள நிலையில் அணு ஆயுதத்தைப் பயன்படுத்தும் முட்டாள்தனமான முடிவை பாகிஸ்தான் எடுக்காது என்று நான் நினைக்கிறேன்.

உள்நாட்டுப் பாதுகாப்புப் பணிகளுக்கு ராணுவத்தை அதிக அளவில் பயன்படுத்துவது குறைத்துக் கொள்ளப்படவேண்டும். வீரப்பனைப் பிடிக்க ராணுவத்தைஅழைக்கவேண்டும் என்று மக்கள் கூறும் அளவுக்கு நிலைமை சென்றுவிட்டது.

மாநிலங்களில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவது என்பது அந்தந்த மாநில அரசுகளின் பொறுப்பு. தனது காவல்துறையையும், புலனாய்வுத் துறையையும் தான்மாநிலங்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

சின்னச் சின்ன பிரச்சினைகளுக்கெல்லாம் ராணுவத்தை மாநில அரசுகள் அழைத்துப் பயன்படுத்தக்கூடாது. அத்தகைய நடவடிக்கைகள் ராணுவ அமைப்பைஅது சீர்குலைத்துவிடும்.

மத்திய பாதுகாப்புப் படைகளான மத்திய ரிசர்வ் போலீஸ் படை மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படை ஆகியவற்றை சீரமைக்கவேண்டும். அவைகளுக்குநவீன கருவிகளும் சிறந்த பயிற்சியும் அளிக்கவேண்டும். கீழ் மட்ட அளவில் இருந்து உயர் மட்ட அளவு வரை சிறந்த தலைமை வேண்டும்.

காஷ்மீர் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்புடன் மத்திய அரசு பேச்சு வார்த்தை நடத்துவது நல்ல முடிவைத் தரும்.

இந்திய அரசுக்கு வேறு வழியில்லை. தீவிரவாதிகளுடன் பேசித்தான் ஆகவேண்டும். அவர்களுடன் இந்திய அரசு பேச விரும்பவில்லை என்று ஜம்முகாஷ்மீர் மாநில மக்கள் நினைத்தால் அவர்கள் இந்தியாவுக்கு அன்னியமாகி விடுவார்கள்.

தீவிரவாதிகளுடன் பேச இந்திய அரசு சம்மதிக்காது என்று பாகிஸ்தான் முதலில் நினைத்தது. ஆனால், இந்தியா சம்மதித்த பிறகு அதனால் எதுவும்செய்ய முடியவில்லை.

இப்போது காஷ்மீர் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்தும் நிலையில் இருந்து அது வெதுதூரத்துக்குச் சென்றுவிட்டது.

பாகிஸ்தான் ராணுவத்தின் ஒரு பகுதிதான் ஐ.எஸ்.ஐ. இப்போது இந்தியாவுக்குள் ஐ.எஸ்.ஐ. புகுந்துவிட்டது. இதற்கு அந்த அமைப்பின் திறமை மட்டுமல்லநமது பிரச்சினைகளும், பலவீனமும்தான் அதற்குக் காரணம். நமது பலவீனத்தை அந்த அமைப்பு நன்றாகப் பயன்படுத்திக் கொண்டுவிட்டது என்றார்மாலிக்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+