பிரேஸிலில் தொற்று நோய்க்கு 50 பேர் பலி
ரியோ டி ஜெனீரோ:
பிரேஸில் நாட்டின் வடகிழக்குப் பகுதியில் லெப்டோஸ்பைரோசிஸ் என்ற தொற்று நோய்க்கு இதுவரை 50 பேர் இறந்துள்ளனர்.
கடந்த 48 மணி நேரத்தில் பெர்னாம்புகோ என்ற மாநிலத்தில் மட்டும் 46 பேர் இறந்துள்ளனர். பெர்னாம்புகோவுக்கு அண்டை மாநிலமானஅலாகோவாஸிலும் லெப்டோஸ்பைரோசிஸ் தொற்று நோய் பரவியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அந்த மாநிலத்தில் பலர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் கூறினர்.இரு மாநிலங்களிலும் 300 பேருக்கு இந் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந் நோய் வேகமாகப் பரவி வருகிறது. அடுத்த சில தினங்களில் இந் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்றும்அதிகாரிகள் தெரிவித்தனர்.
எலியின் சிறுநீரகத்திலிருந்து இந் நோய் பரவுகிறது. பிரேஸிலின் வடகிழக்குப் பகுதியில் இம் மாத தொடக்கத்தில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இந்தவெள்ளப் பெருக்கு காரணமாக இந் நோய் பரவியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இந் நோயைக் கட்டுப்படுத்தும் முயற்சிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
யு.என்.ஐ.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications