கொலை முயற்சியில் ஈடுபட்ட 3 பேருக்கு 7 ஆண்டு சிறை
கோவை:
முன் விரோதம் காரணமாக ஒருவரைக் கொலை செய்ய முயன்ற மூவருக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.
கோவை கணபதியைச் சேர்ந்தவர் சுந்தரேசன். இவருக்கும் இதே பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் (24), ராதாகிருஷ்ணன் (29), குட்டி (27),வேணுகோபால் (18), சந்திரன் (42), ஜெகதீசன் (32) ஆகியோருக்கும் இடையே முன்பகை இருந்து வந்தது.
இந்நிலையில் கடந்த 94-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24ம் தேதி சத்தி மெயின் ரோட்டில் சுந்தரேசன் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவரை விஜயகுமார், ராதாகிருஷ்ணன், குட்டி ஆகியோர் வழிமறித்து கத்தியால் குத்திக் கொலை செய்ய முயன்றனர். பலத்த காயமடைந்தசுந்தரேசன், மருத்துவனையில் சேர்க்கப்பட்டு உயிர் பிழைத்தார்.
சுந்தரேசன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விஜயகுமார், ராதாகிருஷ்ணன், குட்டி ஆகியோரைக் கைது செய்தனர்.
இது தொடர்பான வழக்கை விசாரித்த கோவை முதலாவது கூடுதல் உதவி அமர்வு நீதிபதி பிரேம்குமார் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தார்.
குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேருக்கும், சட்டவிரோதமாகக் கூடியதற்காக 2 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், சுந்தரேசனைக் கொலை செய்யமுயன்றதற்காக 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் விதித்தார். இந்த இரு தண்டனைகளையும் ஏக காலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிட்டார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications