உழவர் சந்தை வரிசையில் நெசவாளிகளுக்கு லூம் வேர்ல்ட்"
சென்னை:
தமிழ்நாட்டில் நெசவாளர்கள் உற்பத்தி செய்யும் துணிகளை நே ரடியாக விற்பனைசெய்ய "லூம் - வேர்ல்ட் என்னும் தொடர் விற்பனை நிலையங்கள் அமைக்கப்படஉள்ளன.
இதுகுறித்து தமிழக அரசு சனிக் கிழமை வெளியிட்டஅறிக்கை வருமாறு:
நெசவாளர்களால் உற்பத்தி செய்யப்படும் பல்வேறு துணி வகைகளை விற்பனைசெய்ய, மாநிலத்தின் பல்வேறு இடங்களில் விற்பனை நிலையங்கள் அமைக்கப்பட்டுவருகின்றன.
வாடிக்கையாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்களிடையே நெருக்கமான இணைப்பைஏற்படுத்தும் நோக்கத்துடன் நெசவாளர் சங்கங்களின் நேரடி விற்பனை நிலையமாக"லூம் வேர்ல்ட் எனும் தொடர் விற்பனை நிலையங்கள் அமைக்கதிட்டமிடப்பட்டுள்ளது.
கைத்தறித் துறை அமைச்சர் என்.கே.கே.பெரியசாமி 29ம் தேதி செவ்வாய் கிழமைசென்னை அண்ணாநகரில் லூம் வேர்ல்ட் விற்பனை நிலையத்தைத் தொடங்கி வைக்கஉள்ளார்.
வாடிக்கையாளர்களை கவரும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த விற்பனைநிலையத்தில் மொத்த விற்பனை வசதி, சுலபத் தவணை வசதி, கடன் அட்டை (கிரெடிட்கார்டு) கொடுத்து வாங்கும் வசதி, மின்னணுவியல் வணிக முறை (ஈ-காமர்ஸ்)வசதிகளும் உண்டு.
லூம் வேர்ல்டு நிலையம் முதலாண்டில் ரூ.5 கோடி விற்பனை அளவை எட்டும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications