நீர்மூழ்கி மோதியது எப்படி என்பது புடினுக்குத் தெரியும்?
மாஸ்கோ:
ஆர்க்டிக் கடலில் மூழ்கிய ரஷ்ய நீர்மூழ்கிக் கப்பல் மீது மோதியது எது என்று உலக நாடுகள் பல யோசித்துக் கொண்டிருக்கின்றன.
இந் நிலையில், மோதியது எது என்று எங்களுக்குத் தெரியாது என யார் சொன்னது என்று கேட்டுள்ளார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின். புடினின் இந்த கேள்விவிளக்கம் பலருடைய புருவத்தை உயர்த்தியுள்ளது.
ரஷ்ய கடற்படைக்குச் சொந்தமான குர்ஸ்க் என்ற அணு சக்தியால் இயங்கும நீர்மூழகிக் கப்பல் ஆர்க்டிக் கடலில் மூழ்கியது. இதில் கப்பலுக்குள்இருந்த 118 ஊழியர்களும் மூச்சுத்திணறி இறந்துவிட்டனர்.
இவ் விபத்து நடந்தது ஆகஸ்ட் 14-ம் தேதி. ஆனால், சம்பவ இடத்துக்கு வெளிநாட்டு மீட்புக் குழுவினர் சென்றது ஆகஸ்ட் 21-ம் தேதிதான். மீட்புக்குழுவினருக்கு ரஷ்ய அதிகாரிகள் அனுமதி அளிக்காததுதான் இதற்குக் காரணம்.
ரஷ்ய அதிகாரிகளின் இந்த நடவடிக்கையால், கப்பலுக்குள் சிக்கியவர்களை உயிருடன் மீட்க முடியவில்லை. இன்னும் கப்பலுக்குள் உள்ள சடலங்களும்மீட்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இச் சம்பவத்துக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின்தான் காரணம் என்று குற்றச்சாட்டு கூறப்படுகிறது. அவரும் இச் சம்பவத்துக்கு நான் பொறுப்பேற்றுக்கொள்கிறேன். நானே குற்றவாளி என்று கூறியுள்ளார்.
இதற்கிடையே, திடீரென்று குர்ஸ்க் கப்பல் மூழ்கக் காரணம் என்று உலக நாடுகள் ஆராய்ந்து வருகின்றன. கடலுக்கு அடியில் சென்று வந்த நீர்மூழ்கிவீரர்கள், கப்பலின் முன்பக்கம் பலத்த சேதமடைந்துள்ளது என்று கூறியுள்ளனர்.
அப்படியென்றால் ஏதாவது ஒரு பலமான பொருளுடன் குர்ஸ்க் கப்பல் மோதியிருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. ஆனால், அது எந்த பொருள்என்று இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
இந் நிலையில், விளாடிமிர் புடினிடம் குர்ஸ்க் கப்பல் மீது மோதிய பொருள் என்னவென்று ஏன் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று கேட்டதற்கு அவர்,யார் சொன்னது எங்களுக்குத் தெரியாது என்று பதில் கேள்வி கேட்டுள்ளார். வெள்ளிக்கிழமைதான் இந்த தகவல் வெளியாகியுள்ளது.
இதைப்பார்க்கும்போது இச் சம்பவத்தின் பல தகவல்களை ரஷ்ய அதிபர் உள்பட அதிகாரிகள் மறைக்கின்றனரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
குர்ஸ்க் கப்பல் மீது மோதிய பொருள் என்ன என்று தெரிந்திருந்தும் அதை ஏன் வெளியே சொல்ல அதிகாரிகள் மறுக்கின்றனர் என்றும் தெரியவில்லை.
ரஷ்ய அதிபரின் பதில் பலத்த சர்ச்சையையும், பல கேள்விகளையும் எழுப்பியுள்ளது. எல்லாம் தெரிந்திருந்தும், 118 பேரின் உயிர்களைக் காப்பாற்றமுடியாததால்தான் அவர் இச் சம்பவத்துக்குத் தானே பொறுப்பேற்பதாகவும், நானே குற்றவாளி என்றும் கூறினாரா என்று கேள்வி எழும்பியுள்ளது.
இதற்கிடையே, அமெரிக்காவின் மத்திய உளவுப் பிரிவு துணை இயக்குநர் மாஸ்கோவுக்கு வந்துள்ளதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எதற்காகஅவர் ரஷ்யா வந்துள்ளார். யாரும் அவர் பேச்சு நடத்தினார், என்ன பேசினார் என்ற தகவல்கள் தெரியவில்லை.
குர்ஸ்க் கப்பல், அமெரிக்க நீர் மூழ்கிக் கப்பல் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என்று முதலில் சந்தேகிக்கப்பட்டது. இப்போதுஅமெரிக்க அதிகாரி ஒருவர் ரஷ்யா வந்துள்ளது இச் சந்தேகம் மேலும் வலுப்பெற்றுள்ளது.
யு.என்.ஐ.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications