சாதிக் கட்சிகள் தேவையில்லை என்கிறார் பழனிவேல்ராஜன்
சென்னை:
ஒரு சமுதாயத்தை அழிப்பதற்கு ஒரே வழி அச் சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு சங்கம் அரசியல் கட்சியாக மாறுவதுதான். ஆகவே, சாதிக் கட்சிகள்தேவையில்லை என்று தமிழக சபாநாயகர் பி.டி.ஆர். பழனிவேல் ராஜன் தெரிவித்தார்.
சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சட்டசபை முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் வி.கே. ராமசாமி முதலியாரின் நூற்றாண்டு விழாவில் அவர்பேசியதாவது:
தமிழகத்தில் வகுப்புவாரி பிரதிநிதித்துவ உத்தரவு 70 ஆண்டுகளுக்கு முன்பே நீதிக் கட்சி ஆட்சியில் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஒரு சமுதாயத்தை அழிப்பதற்கு ஒரே வழி, அச் சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு சங்கம் சாதிக் கட்சியாக மாறுவதுதான். சிறுபான்மைச் சமுதாயங்கள்ஒவ்வொன்றும் ஒரு அரசியல் கட்சியைத் தொடங்கினால் அச் சமுதாயங்கள் விரைவில் காணாமல் போய்விடும்.
தப்பித் தவறி முதலியார் சமுதாயத்தில் நான் பிறந்துவிட்டேன். முதலியார் சமுதாய மக்களுக்காக அனைத்து முதலியார்கள் சங்கம் உருவாக்கப்பட்டுளளது.
சிறுபான்மைச் சமுதாய மக்களைக் காப்பாற்றிய முதலியார்களைக் காப்பாற்ற இப்போது இச் சங்கம் உருவாக்கப்பட்டுள்ளது. இது சங்கமாகவேஇருந்துவிடட்டும். முதலியார்களுக்கு என்று தனிக் கட்சி தேவையில்லை.
நீதிக் கட்சியின் உண்மையான வாரிசான முதல்வர் கருணாநிதி, நமது முன்னோர்களைப் போல் சிறுபான்மையினரையும் மற்றவர்களையும் நிச்சயம் காப்பார்என்றார் பழனிவேல் ராஜன்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications