தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கினார் வரதராஜப் பெருமாள்
கொழும்பு:
ஈழ மக்கள் புரட்சிகர முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எப்.) தலைவர் வரதராஜப் பெருமாள் தனது தேர்தல் பிரசாரத்தை சனிக்கிழமை தொடங்கினார்.
இலங்கை நாடாளுமன்றத்துக்கு அக்டோபர் 10-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நடவடிக்கையில் அரசியல் கட்சிகள் தீவிரமாகஈடுபட்டுள்ளன.
இந் நிலையில், வரதராஜப் பெருமாள் தனது தேர்தல் பிரசாரத்தை யாழ்ப்பாணத்தில் சனிக்கிழமை தொடங்கினார். யாழ்ப்பாணம் பகுதியில்தான் மற்ற 4தமிழ் கட்சிகளும் தேர்தலில் போட்டியிட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் வட மாகாண முன்னாள் முதல்வரான வரதராஜப் பெருமாள், இந்தியாவில் 8 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தார். இப்போது அவர் தீவிரஅரசியல் ஈடுபட முடிவு செய்துள்ளார்.
இலங்கையின் இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண முயற்சி மேற்கொண்டுள்ள அதிபர் சந்திரிகா குமாரதுங்காவின் கரத்தை வலுப்படுத்தும் நோக்கில் இம்முடிவை அவர் மேற்கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
யாழ்ப்பாணம் மற்றும் வன்னி பகுதிகளில் தனது கட்சி சார்பில் 12 பேர் போட்டியிடுவார்கள் என்றும், கிழக்குப் பகுதியில் உள்ள மற்ற மூன்றுமாகாணங்களில் ஆளும் மக்கள் கூட்டணி வேட்பாளர்களை தனது கட்சி ஆதரிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணி (டி.யு.எல்.எப்.), தமிழ் ஈழ மக்கள் விடுதலை இயக்கம் (பிளாட்), தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (டெலோ),ஈ.பி.ஆர்.எல்.எப் (சுரேஷ் பிரேமசந்திரன் பிரிவு) ஆகிய பிற தமிழ் கட்சிகளும் யாழ்ப்பாணம், வன்னி மற்றும் கிழக்கு மாகாணங்களில் போட்டியிடஉள்ளன.
தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் திங்கள்கிழமை தொடங்குகிறது. தேர்தல் விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படிபோலீஸாருக்கு அதிபர் சந்திரிகா குமாரதுங்கா உத்தரவிட்டுள்ளார்.
யு.என்.ஐ.


Click it and Unblock the Notifications
