காற்றாலை மின் உற்பத்தியில் தமிழகம் நம்பர் ஒன்!
சென்னை:
காற்றாலை மூலம் மின்சாரம் தயாரிக்கும் பிரிவில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது எனமேட்டூர் வந்த மின்வாரியக்குழு உறுப்பினர் ஜஸ்டின் பால் கூறினார்.
மேட்டூர் அனல் மின் நிலைய சுற்றுலா மாளிகையில் நிருபர்களுக்கு ஜஸ்டின் பால்அளித்த பேட்டி:
தமிழகத்திற்கு நாள் ஒன்றுக்கு 5 ஆயிரத்து 800 மெகாவாட் மின்சாரம்தேவைப்படுகிறது. தற்பொழுது 119 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்திசெய்யப்படுகிறது. தமிழ் நாட்டில் மின் தட்டுப்பாடு இல்லை.
வருங்காலத்தில் கோவில்களப்பால் என்ற இடத்தில் காற்றின் மூலம் 107 மெகாவாட்மின்சாரம், தர்மபுரி சாமல்பட்டியில் 106 மெகாவாட் மின்சாரம், பிள்ளைபெருமாள்நல்லூர் என்ற இடத்தில் 330 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட உள்ளது.
எண்ணூர் அனல் மின் நிலையத்தை புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன்மூலம் கூடுதலாக 150 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். இந்தபணிகளெல்லாம் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் முடிவடையும். இதனால்அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் கூடுதலாக 800 மெகாவாட் மின்சாரம் உற்பத்திசெய்யும். அடுத்த ஆண்டு மின் தட்டுப்பாடு இருக்காது.
மேட்டூர் அனல் மின் நிலையம் கடந்த ஆண்டைவிட 15 சதவீத மின்சாரம் கூடுதலாகஉற்பத்தி செய்துள்ளது. ஆயில் மற்றும் எரிபொருள் சிக்கனமாக பயன்படுத்தியதற்காகமத்திய அரசு விருது வெள்ளி மெடலும், கேடயம் மற்றும் 20 லட்ச ரூபாய் பணம்வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் காற்றாலை மூலம் 220 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.காற்றாலை மின் உற்பத்தியில் தமிழகம்தான் முதலிடம் வகிக்கிறது. உலக அளவில்இந்தியா காற்றாலை மூலம் மின்சாரம் தயாரிப்பதில் 4-வது இடத்தைப் பெற்றுள்ளது.
கடந்த ஆண்டை பார்க்கும் பொழுது இந்த ஆண்டு 60 சதவீதம் தான் மழை பெய்துதண்ணீர் உள்ளது. தொடர்ந்து நல்ல மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றுஅவர் கூறினார்.


Click it and Unblock the Notifications
