ராஜஸ்தானில் வருகிறது சுற்றுலா போலீஸ்
ராஜஸ்தான்:
வெளிநாட்டுப் பயணிகள் அதிகம் குவியும் சுற்றுலாத் தலமான ராஜஸ்தானில் சுற்றுலாப் பயணிகளின்பாதுகாப்புக்கென்று தனிப்போலீஸ் பிரிவு அமைக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து தலைநகர் ஜெய்ப்பூரில் நடந்த சுற்றுலாப்பயணிகள் பாதுகாப்பு கருத்தரங்கில் கலந்து கொண்டராஜஸ்தான் மாநில சுற்றுலாத்துறை செயலாளர் லலித் கே.பன்வார் பேசியதாவது:
இந்தியாவிலேயே மிகச் சிறந்த சுற்றுலாத் தலம் ராஜஸ்தான் மாநிலம். வெளிநாட்டுப் பயணிகள் பலர் விரும்பிவரும் மாநிலமும் இதுதான். ஆனால் சுற்றுலாப் பயணிகள் சந்திக்கும் பிரச்சனைகளும் ஏராளம். சுற்றுலாத் துறைஏஜன்ட்டுகளால் சுற்றுலாப் பயணிகள் பலர் ஏமாற்றப்படுகிறார்கள். அவர்கள் மோசடிக்கு உள்ளாக்கப்படுகிறார்கள்என்பது போன்ற தகவல்கள் அதிர்ச்சியானவை.
இதைத் தடுக்க மாநில அரசு தீர்மானித்துள்ளது. அதன் முதல் கட்ட நடவடிக்கையாக சுற்றுலாப் பயணிகளின்நலனிற்காகவும், பாதுகாப்பிற்காகவும் தனிப் போலீஸ் பிரிவை அமைக்கத் திட்டமிட்டுள்ளது. இந்தப் போலீஸ்பிரிவு வரும் அக்டோபர் 1 ம் தேதி முதல் செயல்படத் தொடங்கும்.
ஜெய்ப்பூர், ஜன்தார் மன்தார், அமர் போர்ட் பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளுக்குப் போதுமான பாதுகாப்பு தரபோலீஸ் முடிவு செய்துள்ளது. சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றியது, மோசடி செய்தது தொடர்பாக இதுவரை 500க்கும் மேற்பட்டோரைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.
பள்ளிகளில் மாணவ மாணவர்களுக்கு, பாரம்பரியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும்,வன்முறையைத் தடுத்து நிறுத்தும் வகையிலும் பல கலைநிகழ்ச்சிகள் நடத்தவும் ராஜஸ்தான் சுற்றுலாத் துறைநடத்தத் திட்டமிட்டுள்ளது என்றார் லலித் கே.பன்வார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications