For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

என்ன முடிவெடுப்பார் மூப்பனார்?

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

அதிமுகவுடனான கூட்டணி குறித்து மூத்த அரசியல் தலைவர் எம்.பி.சுப்ரமணியம், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனாருக்கு கடிதம் எழுதியுள்ளார்.இதையடுத்து கூட்டணியை மூப்பனார் முறித்துக் கொள்வார் என்று கூறப்படுகிறது.

த.மா.காவின் மூத்த தலைவர்கள் ஜெயலலிதாமீது கடும் கோபத்தில் இருக்கின்றனர். சென்னையில் நடந்த ஈ.வி.கே சம்பத் பாராளுமன்ற உரைதொகுப்பு புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய ஜெயலலிதா, ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு இதெல்லாம் நடக்காத காரியம் என்று மூப்பனாரைமேடையில் வைத்துக்கொண்டே பேசினார். இது பலருக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது.

இந்தச் சூழ்நிலையில், சிதம்பரத்தில் செவ்வாய்க்கிழமை த.மா.கா செயற் குழுக் கூட்டம் நடக்கிறது. ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு இல்லைஎன்றால் கூட்டணியே தேவையில்லை. மூன்றாவது அணி மூப்பனார் தலைமையில் அமைப்போம் என்கிற மன நிலையில் தமிழ் மாநில காங்கிரஸ்தலைவர்கள், தொண்டர்கள் உள்ளனர்.

மூப்பனாரின் முடிவு என்ன என்று தெரியாத நிலையில் நம்மிடம் பேசிய த.மா.கா தலைவர்கள் போதும் இனியாவது மரியாதையோடு வாழ்வோம்.ஆட்சி, அதிகாரம் எல்லாவற்றிலும் பங்கு வேண்டும். சும்மா இந்த அம்மா முதலமைச்சர் ஆகிறதுக்கு , நாங்க நாயா உழைச்சு கடைசியில இவங்கவாயை பார்த்துக்கிட்டு இருக்கனுமா?

தலைவர்கிட்ட சொல்லியிருக்கோம். அவரே நல்ல விதமா அறிவிப்பார்னு நினைக்கிறோம். அறிவிக்கவும் எதிர்பார்க்கிறோம் என்றார் அந்தபிரமுகர்.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், காங்கிரஸ் உட்பட தமிழக அரசியல் கட்சிகளால் சீனியர் என்று மதிக்கப்படும்எம்.பி.சுப்பிரமணியம், மூப்பனாருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

இந்தக் கடிதம் த.மா.காவினர் பலருக்கு நம்பிக்கையளிப்பதாகவே இருக்கிறது. கூடவே, எவ்வளவு சீனியர் மனிதர் அவர். அவரே இன்று அ.தி.முகமீது, ஜெயலலிதாமீது வருத்தத்தில் இருப்பது எங்களால் தாங்கிக்கொள்ள முடியாதது தான் என்று வருத்தப்பட்டவர், கடிதத்தில் பழைய சம்பவம் ஒன்றையும்மூப்பனாருக்கு நினைவுபடுத்தியுள்ளார் என்றார்.

த.மா.காவின் அதிகாரபூர்வ பத்திரிகையான நவசக்தியில். 27-1-99 ம் வருடம் ஜெயலலிதாவுக்கு பதிலளித்து ஒரு கட்டுரை வெளியிடப்பட்டிருந்தது.கட்டுரை இப்படிப் போகிறது...

ஊழல் எதிர்ப்புக்கொள்கையில் பிறந்தது த.மா.கா. தொடர்ந்து அந்தக் கொள்கையில் உறுதியாக இருக்கிறது. அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேரத.மா.கா ஏன் மறுத்தது?. த.மா.காவுக்கு முக்கியம் சில இடங்கள் அல்ல. தமிழர்களின் மானத்தையும் எதிர்கால சந்ததியினரை சீரவிழிலிருந்துகாப்பதும் தான் முக்கியம். இது தான் த.மா.காவின் முக்கிய கொள்கை.

குலப்பெண்ணுக்கு கற்பு எப்படி முக்கியமோ? அப்படி த.மா.காவுக்கு தமிழர் மானம் பாதுகாப்பது முக்கியம். அப்படி இருக்க சில உடனடி அரசியல்ஆதாயத்திற்காக த.மா.காவை தன்னுடன் கொண்டுவந்துவிட ஜெயலலிதா நினைப்பது அவரது பேதமையைக் காட்டுகிறது.

காமராஜர் ஆட்சியை அவராலேயே கொண்டு வர முடியவில்லை என ஜெயலலிதா கேலி செய்திருக்கிறார். தூய்மை நேர்மை, நாணயம் ஆகியவற்றில்உறுதியாக இருந்த காமராஜரின் பெயரை ஊழல் கொள்ளை மற்றும் வெட்கங்கெட்ட அரசியல் போன்றவற்றில் அழுந்திக் கிடக்கும் ஜெயலலிதாஉச்சரிப்பது காமராஜரின் தொண்டர்களால் சகித்துக் கொள்ள முடியாது".

இப்படி த.மா.கா பத்திரிகையில் வெளியிட்ட கட்டுரையை நயமாக நினைவுபடுத்திய சுப்பிரமணியம், கடிதத்தின் இறுதியில், தமிழ்நாட்டில் காங்கிரஸ் இயக்கத்தைவளர்ப்பதும் அது செயல்பட உதவுவதும் அதன் ஒப்பற்ற கொள்கைகள் தான்.

அந்தக் கொள்கைகளின் சின்னமாக விளங்குபவர் அதன் தேசியத் தலைவர் சோனியா. அந்தத் தலைவருடைய பெயருக்கும் புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தும்அ.தி.மு.க.வுடன் நட்புடணிருக்க தன்மானமுடைய காங்கிரஸ்காரர்கள் விரும்புவார்களா? இப்படி கேள்வியுடன் முடிந்திருந்தது சுப்ரமணியத்தின் கடிதம்.

மிகச் சரியான நேரத்தில் தைரியமாக, எங்கள் தலைவர் மூப்பனாருக்கு அன்பாக ஆரம்பித்து கடிதம் எழுவிட்டார் சுப்பிரமணியம். மனதில் எவ்வளவுவேதனையிருந்தால் இப்படி எழுதியிருப்பார். காமராஜர் காலத்து மனிதர் சுப்ரமணியம். அவரின் விருப்பப்படி தலைவர் செயல்படவே நாங்களும் விரும்புகிறோம்என்கிறார்கள் த.மா.கா பிரமுகர்கள்.

கடிதம் கிடைத்த பின்னர், சுப்ரமணியத்தை அழைத்துப் பேசினார் மூப்பனார். காங்கிரஸ் கட்சியையும் , சோனியா காந்தியையும் அ.தி.மு.க தரப்பில்விமர்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

காமராஜர் ஆட்சி அமைப்போம் என்று பேசி வந்த நிலையில் கூட்டணி ஆட்சி என்ற கொள்கையை எக்காரணத்தைக்கொண்டும் விட்டுக்கொடுப்பதற்கில்லை என்று முப்பனார், சுப்பிரமணியத்திடம் தெளிவுபடுத்தியுள்ளாராம்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X