த.மா.கா.செயற்குழு இன்று கூடுகிறது

Subscribe to Oneindia Tamil

சிதம்பரம்:

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனார் தலைமையில் கட்சியின் செயற்குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமைசிதம்பத்தில் கூடுகிறது.

கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பே இல்லை என்று தமாகாவின் முக்கியக் கூட்டணிக் கட்சியான அதிமுகவின் தலைவர்ஜெயலலிதா கூறியுள்ள நிலையில், வரும் சட்டசபைத் தேர்தலில் எந்தக் கட்சியுடன் கூட்டணி அமைத்துக்கொள்வது? தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது போன்றவை குறித்து இக்கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.

செயற்குழுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மூப்பானார் ரயில் மூலம் சிதம்பரம் செல்கிறார். கூட்டத்தில்முன்னாள் அமைச்சர்கள் ப.சிதம்பரம், ஜெயந்தி நடராஜன், தனுஷ்கோடி ஆதித்தன், சட்டசபை எதிர்க்கட்சித்தலைவர் சோ.பாலகிருஷ்ணன், எம்.எல்.ஏ. கே.எஸ்.அழகிரி உள்பட 750 க்கும் அதிகமான செயற்குழுஉறுப்பினர்கள் கலந்து கொள்கின்றனர்.

வரும் சட்டசபைத் தேர்தலுக்குப் பின் கூட்டணி ஆட்சியா அல்லது ஒரு கட்சி தனித்து ஆட்சி அமைப்பதா என்பதில்த.மா.கா.கட்சிக்கும், அ.தி.மு.க.விற்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்தது.

இந்த நிலையில் சென்னையில் நடந்த ஒரு கூட்டத்தில், மூப்பனாரை மேடையில் வைத்துக் கொண்டே, கூட்டணிஆட்சியை மக்கள் ஆதரிக்க மாட்டார்கள் என்று ஜெயலலிதா பேசினார். இந்த சூழ்நிலையில் சிதம்பரத்தில் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் நடக்க உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+