ஆந்திரா செல்லும் சென்னை ரயில்கள் ரத்து
சென்னை:
ஆந்திராவில் பாக்யாநகர் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டதையடுத்து சென்னையிலிருந்து அவ்வழியே செல்லக் கூடிய பிற ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஆந்திராவில் அசிபாபாத் ரயில் நிலையம் அருகே பாக்யாநகர் எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டிருந்த போது அது தடம் புரண்டது. இதையடுத்து அந்தப் பாதையில்செல்ல வேண்டிய சென்னை-வாரணாசி எக்ஸ்பிரஸ், கோவை-நிஜாமுதீன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.
திங்கள்கிழமை செல்ல வேண்டிய சென்னை-பாட்னா எக்ஸ்பிரஸ், சென்னை-லக்னோ எக்ஸ்பிரஸ், கொச்சி-கோராக்பூர் எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்துசெய்யப்பட்டுள்ளன.
செவ்வாய்க்கிழமை சென்னையிலிருந்து புறப்பட வேண்டிய ஜம்மு-தாவி எக்ஸ்பிரஸ் ரயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதேபோல, மதுரை-ஜம்முதாவி நவயுக் எக்ஸ்பிரஸ் ரயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications