தீவிரவாதிகள் விடுவிப்பில் புதிய திருப்பம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சந்தனக் கடத்தல் வீரப்பனுடன் சேர தமிழ் தீவிரவாதி மணிகண்டனுக்கு விருப்பமா என்பதை விசாரிக்க ஒரு மாஜிஸ்திரேட்டை நியமிக்கும்படி திருச்சி மாவட்டநீதிபதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செப்டம்பர் 8-ம் தேதி அல்லது அதற்குள் தனது விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கும்படி மாஜிஸ்திரேட்டுக்கு உயர்நீதிமன்றம் காலக்கெடுநிர்ணயித்துள்ளது.

கன்னட நடிகர் ராஜ்குமார் உள்பட 4 பேரை சந்தனக் கடத்தல் வீரப்பன் கடத்திச் சென்றுள்ளான். அவர்களை விடுவிக்கவேண்டும் என்றால் தமிழகசிறைகளில் உள்ள தமிழ் தீவிரவாதிகள் 5 பேரையும் விடுதலை செய்யவேண்டும் என்பது உள்பட 14 கோரிக்கைகளை வீரப்பன் தெரிவித்துள்ளான்.

வீரப்பனின் இக் கோரிக்கையை ஏற்று 5 தமிழ் தீவிரவாதிகளையும் விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்து அதற்கான உத்தரவையும் பிறப்பித்துள்ளது.ஆனால், நீதிமன்ற நடவடிக்கைகளால் அவர்களது விடுதலை தாமதமாகியுள்ளது.

5 தீவிரவாதிகளும் விடுதலை ஆன பிறகு அவர்களை வீரப்பனிடம் தமிழக அரசு ஒப்படைக்க உள்ளது. தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு தடை கோரி 5தீவிரவாதிகளில் ஒருவரான மணிகண்டனின் தந்தை அண்ணாமலை சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

எனது மகன் மணிகண்டன், சந்தனக் கடத்தல் வீரப்பனுடன் சேர விரும்பவில்லை. அவனது விருப்பத்துக்கு மாறாக வீரப்பனிடம் அவனை ஒப்படைக்கதமிழக அரசுக்கு எந்த உரிமையும் இல்லை.

விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனைப் பாராட்டி போஸ்டர் ஒட்டியதற்காக எனது மகனைப் போலீஸார் கைது செய்துள்ளனர். மற்றபடிவேறு எந்த சட்டவிரோத நடவடிக்கையிலும் அவன் ஈடுபட்டதில்லை.

ஆனால், அவன் மீது தஞ்சாவூர் தண்ணீர் தொட்டியில் குண்டு வைத்ததாக மேலும் ஒரு பொய் வழக்கைப் பதிவு செய்தது மட்டுமல்லாமல் அவன் மீது தேசியபாதுகாப்பபுச் சட்டத்தின் கீழும் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தற்போது திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ள எனது மகன் மணிகண்டனுக்கும் எந்த தீவிரவாத நடவடிக்கைக்கும் தொடர்பு இல்லை. இதற்கு முன் எந்தவழக்கிலும் அவன் நீதிமன்றத்தால் தண்டிக்கப்படவில்லை.

வீரப்பனின் கோரிக்கை வெளியானதை அடுத்து மணிகண்டன் மீதான வழக்குகளை வாபஸ் பெற்றுக் கொள்ள தமிழக அரசு முடிவு செய்துள்ளது. மேலும்மணிகண்டனை ஒரு தமிழ்த் தீவிரவாதியாகவும் ஆக்கிவிட்டது. மணிகண்டனை வீரப்பனிடம் ஒப்படைக்க அனுமதிக்கக் கூடாது என்று அந்த மனுவில்அண்ணாமலை கூறியுள்ளார்.

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி கே. கோவிந்தராஜன், வீரப்பனுடன் சேர மணிகண்டனுக்கு விருப்பமா என்பதை விசாரிக்க ஒருமாஜிஸ்திரேட்டை நியமிக்கும்படி திருச்சி மாவட்ட நீதிபதிக்கு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+