அல் உம்மா தடை வழக்கு ... பாட்ஷாவிடம் விசாரணை
கோவை:
அல் உம்மா இயக்கத்தை தடை செய்ததை எதிர்த்து பாட்ஷா தொடர்ந்த வழக்கில் புதன்கிழமையன்றுஉயர்நீதிமன்ற நீதிபதி கோவையில் விசாரணை நடத்தினார்.
கோவையில் கடந்த 97ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு பின்னர் அல்உம்மா இயக்கத்தை அரசு தடை செய்தது.
இந்த தடையை எதிர்த்து அல் உம்மா இயக்கத்தின் தலைவர் பாட்ஷா மற்றும் அவரது மகன் சித்திக்அலி உட்பட 11 பேர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில்நிலுவையில் இருந்து வந்தது.
இந்நிலையில் இவ்வழக்கு விசாரணை செய்ய உயர்நீதிமன்றம் முடிவு செய்தது. இந்த வழக்கைதாக்கல் செய்த பாட்ஷா, கோவை மத்திய சிறையில் குண்டு வெடிப்பு வழக்கு விசாரணைக்காகஅடைக்கப்பட்டுள்ளார்.
எனவே, இவரிடம் விசாரணை நடத்த சென்னையிலிருந்து உயர்நீதிமன்ற நீதிபதி பொறுப்பு வகிக்கும்நீதிபதி என்.கே ஜெயின் கோவை வந்தார்.
அல் உம்மா இயக்கத் தலைவர் பாட்ஷாவிடம் தனி நீதிமன்றத்தில் இது குறித்து விசாரணைநடத்தினார். பின்னர் வழக்கு விசாரணையை ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications