லஞ்சம் வாங்கிய தமிழக சுங்கத்துறை அதிகாரி கைது
டெல்லி:
திருச்சியில் ரூ. 4.3 லட்சம் லஞ்சம் வாங்கிய மத்திய சுங்கத்துறை (சென்ட்ரல் எஸ்சைஸ்) அதிகாரியை சி.பி.ஐ. கைது செய்தது.இவருடன் கூட்டு சேர்ந்து லஞ்சம் வாங்கிய மற்றொரு அதிகாரி தலைமறைவாகிவிட்டார்.
திருச்சியில் மத்திய சுங்கத்துறை அலுவலகத்தில் குற்றத்தடுப்புப் பிரிவில் கண்காணிப்பாளர்களாக பணியாற்றி வருபவர்கள் தமிழ்அரசன், ஜெயக்குமார். சமீபத்தில் வரி ஏய்ப்பு செய்த ஒருவரை இவர்கள் பிடித்தனர். அவர் மீது சட்டப்படி நடவடிக்கைஎடுக்காமல், அவரை வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டுமானால் ரூ. 5 லட்சம் லஞ்சம் தர வேண்டும் என கேட்டனர்.
பின்னர் அவருடன் பேரம் செய்து ரூ. 4.3 லட்சம் கொடுத்தால், வழக்கிலிருந்து தப்ப விடுவதாக உறுதியளித்தனர்.
இதையடுத்து அந்த நபர் இந்த இரு அதிகாரிகள் குறித்தும் சி.பி.ஐயிடம் புகார் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து சி.பி.ஐ. இவர்கைளப் பிடிக்க வலை விரித்தது. அந்த நபரிடம் ரூ. 4.3 லட்சத்தை தமிழரசனிடம் அளிக்குமாறுசிபிஐ அதிகாரிகள் கூறினர்.
தமிழரசன் அந்த பணத்தை வாங்கியபோது மறைந்திருந்த சிபிஐ அதிகாரிகள் அவரைக் கையும் களவமாகப் பிடித்தனர். அவரைகாவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தை அடுத்து ஜெயக்குமார் தலைமறைவாகிவிட்டார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications