கொலம்பியாவில் தீவிரவாதிகள் தாக்குதலில் 20 பேர் சாவு
பகோதா (கொலம்பியா):
கொலம்பியா முழுவதிலும் அமெரிக்க அதிபர் கிளிண்டனுக்கு எதிராக மார்க்சிஸ்ட் புரட்சிக்காரர்கள் நடத்திய திடீர் தாக்குதலில் 20 பேர்கொல்லப்பட்டனர்.
அமெரிக்க நிறுவனங்கள் மற்றும் அமெரிக்க மக்களைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடந்தது. கொலம்பியாவிலுள்ள முக்கியமான தீவிரவாதஅமைப்புகளான கொலம்பிய புரட்சிகர ராணுவப் படை மற்றும் தேசிய விடுதலைப் படை ஆகிய இரு கொரில்லா தீவிரவாத அமைப்புகளும் இந்ததாக்குதலில் ஈடுபட்டன.
இரு அமைப்புகளையும் சேர்ந்த 22,000 தீவிரவாதிகள் நாடு முழுவதும் திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். ராணுவம், போலீஸ் நிலைகள் மீது இவர்கள்தாக்குதல் நடத்தினர். வங்கிகளில் குண்டு வீசினர். கொலம்பியாவின் 32 மாநிலங்களில் 9 மாநிலங்களில் கடுமையான தாக்குதல் இருந்ததாகக்கூறப்பட்டது. ஒரு எண்ணெய்
பைப் லைனிலும் இவர்கள் குண்டு வீசித் தாக்குதல் நடத்தினர்.
கொலம்பியாவின் துறைமுக நகரான கார்ட்டஜீனா நகரில் அமெரிக்க அதிபர் கிளிண்டனும், கொலம்பிய அதிபர் ஆன்டிரஸ் பாஸ்ட்ரானாவும் புதன்கிழமைசந்தித்துப் பேசினர். இந்தப் பகுதியில் வன்முறை ஏதும் இல்லை என்று கொலம்பியப் பாதுகாப்புப் படையினர் தெரிவித்தனர்.
கிளிண்டன் கலந்து கொண்ட இந்த சந்திப்புக்குக் கடும் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 5000 ராணுவ வீரர்கள், போலீஸார் மற்றும் அமெரிக்க புலனாய்வுஏஜென்டுகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications