தீபாவளியன்று வெடி வெடிக்க டெல்லியில் கட்டுப்பாடு
டெல்லி:
தீபாவளியின்போது மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை தான் வெடிகளை வெடிக்க வேண்டும் என டெல்லிஉயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தவிர சுற்றுச்சூழல்துறையின் விதிகளை மீறி அதிக சப்தத்துடன் வெடிக்கும் வெடிகளை உடனே தடைசெய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
வெடிக்கும் இடத்திலிருந்து 4 மீட்டர் தொலைவுக்கு 125 டெசிபல் ஒலியை உண்டாக்கும் எந்த வெடிக்கும் அனுமதிஅளிக்க முடியாது என சுற்றுச்சூழல்துறை கடந்த ஆண்டில் உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவுப்படி ஒரு கார் டயர் வெடிக்கும் சப்தத்திற்கு அதிகமான ஒலியை உருவாக்கும் வெடிகளை வெடிக்கதடை போடப்பட்டுள்ளது.
ஆனால், இந்த விதிகளை மதிப்பதற்கு நாட்டில் ஆளே இல்லை.
இதை டெல்லி உயர் நீதிமன்றம் கடுமையாக கண்டித்துள்ளது. விதிகளை அமலாக்க போலீசாராலும் மாநகராட்சிஅதிகாரிகளாலும் முடியாவிட்டால், அப்புறம் விதிகளை கொண்டு வருதில் என்ன பயன் உள்ளது என நீதிமன்றம்கேள்வி எழுப்பியது.
இதனால், வெடிகள் தொடர்பான எந்த விதி மீறப்பட்டாலும் அதில் தொடர்புடையவர்களை உடனே கைதுசெய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வெடிகளை தயாரிக்கும் நிறுவனங்கள் அந்த வெடி உருவாக்கும் சப்தத்தின் அளவு குறித்து வெடிகளின் மீதேஅச்சிட வேண்டும். இது வரும் நவம்பர் 1 ம் தேதி முதல் அமலாக்கப்பட வேண்டும்.
வெடிகளை திறந்த மைதானங்களில் தான் வெடிக்க வேண்டும். மருத்துவனைகள் அருகே வெடி வெடிக்கக் கூடாதுஎன்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications