தேர்தலை எதிர்க்கும் வழக்குகளை அனுமதிக்க முடியாது - உச்ச நீதிமன்றம்
டெல்லி:
தேர்தல் நடைமுறைப் பணிகள் தொடங்கிவிட்டால் தேர்தலை எதிர்த்து யாராவது மனுதாக்கல் செய்தால் அதை ஏற்றுக் கொள்ளமுடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
அரசியலமைப்புச் சட்டத்தின் 329 (பி) பிரிவைச் சுட்டிக் காட்டி உச்ச நீதிமன்றத்தின்தலைமை நீதிபதி ஏ.எஸ். ஆனந்த் மற்றும் நீதிபதிகள் ஆர்.சி.லஹோடி, கே.ஜி.பாலகிருஷ்ணன் ஆகியோர் கொண்ட பெஞ்ச் இந்த அறிவிப்பை வெளியிட்டது.
தேர்தல் தொடர்பாக தாக்கல் செய்யப்படும் மனுக்கள் மீது உத்தரவு பிறப்பிக்க உயர்நீதிமன்றங்களுக்கு அதிகாரம் வழங்கும் அரசியலமைப்புச் சட்டத்தின் 226-வது பிரிவுஇதன் மூலம் செயலிழந்ததாகிவிடுகிறது என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.
ஆகவே, தேர்தல் நடைமுறைப் பணிகள் தொடங்கிவிட்டால் அந்த தேர்தலை எதிர்த்துஇனி யாரும் மனு தாக்கல் செய்யமுடியாது. அப்படி தாக்கல் செய்தாலும் அந்த மனுஏற்றுக் கொள்ளப்படாமல் நிராகரிக்கப்படும் என்ரு நீதிபதிகள் கூறியுள்ளனர்.
1999-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. கேரளத்தில் நடந்த தேர்தல்பணிகள் தொடர்பாக வாக்குகளை எண்ணுவது, தேர்தல் கமிஷன் தனது அதிகாரத்தின்கீழ் செயல்படுவது ஆகியவை குறித்து தேர்தல் கமிஷன் ஒரு அறிவிக்கைவெளியிட்டது.
இந்த அறிவிக்கையை அரசியலமைப்புச் சட்டத்தின் 226-வது பிரிவைக் காரணம்காட்டி கேரள உயர்நீதிமன்றம் தடை செய்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில்தேர்தல் கமிஷன் மனு செய்தது.
இந்த மனு மீது விசாரணை நடத்தி மேற்கண்ட புதிய உத்தரவை உச்ச நீதிமன்றம்பிறப்பித்துள்ளது. தேர்தல் குறித்து மனு தாக்கல் செய்வதாக இருந்தால் தேர்தல் முடிந்தபிறகு அல்லது தேர்தலுக்கு முன்பாகத்தான் செய்யவேண்டும். இடையில் தாக்கல்செய்யும் எந்த மனுவும் தள்ளுபடி செய்யப்படும் என்று உச்ச நீதிமன்றம்அறிவித்துள்ளது.
யு.என்.ஐ.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications