எர்ஷாத்துக்கு எம்.பி. பதவி போச்!
டாக்கா:
வங்கதேச முன்னாள் ராணுவ ஆட்சியாளர் உசேன் முகம்மது எர்ஷாத்திடமிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டது.
முன்னாள் சர்வாதிகாரியான எர்ஷாத் மீது ஊழல் குற்றச்சாட்டு கூறப்பட்டிருந்தது. நீதிமன்ற விசாரணையில் இது நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு 5ஆண்டு சிறைத் தண்டனை விதித்து வங்கதேச உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து எர்ஷாத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டதாக நாடாளுமன்றஅதிகாரிகள் தெரிவித்தனர்.
தலைநகர் டாக்காவின் மையப் பகுதியில் எர்ஷாத் கட்டி வரும் பலமாடி கட்டடம் தொடர்பான வழக்கில் அவருக்கு ரூ.4.4 கோடி அபராதம்விதிக்கப்பட்டது.
எர்ஷாத்தின் வருமானத்துக்கும் அதிகமாக அக் கட்டடம் கட்ட செலவிடப்படுகிறது. அந்த கூடுதல் பணம் ஊழல் செய்து பெறப்பட்டது என்று அவர் மீதுகுற்றம் சாட்டப்பட்டது. இந்த குற்றமும் நிரூபிக்கப்பட்டுத்தான் அவருக்கு ரூ. 4.4 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.
எனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைப் பறித்தது சட்டவிரோதம். யாரும் எனது பதவியைப் பறிக்கமுடியாது என்று வங்கதேச உச்சநீதிமன்றத்தில்தாக்கல் செய்த அப்பீல் மனுவில் எர்ஷாத் கூறியுள்ளார்.
ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் அப் பதவியை இழக்கவேண்டும் என்பது வங்கதேச பொதுமக்கள் பிரதிநிதித்துவச்சட்டமாகும்.
யு.என்.ஐ.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications