சிக்னல் வந்தது ... காட்டுக்குள் நுழைந்தார் கோபால்
சென்னை:
சந்தனக் கடத்தல் வீரப்பனிடமிருந்து அனுமதி கிடைத்ததையடுத்து அரசுத் தூதராகசென்றுள்ள நக்கீரன் ஆசிரியர் கோபால் காட்டுக்குள் பயணத்தைத் துவக்கினார்.
நடிகர் ராஜ்குமார் உள்ளிட்டவர்களை மீட்பதற்காக நக்கீரன் கோபால் தொடர்ந்துமுயற்சிகளை மேற்கொண்டுள்ளார். தமிழ்த் தீவிரவாதிகள் விடுதலை, தமிழ் கைதிகள்விடுதலை உள்ளிட்ட வீரப்பனின் சில கோரிக்கைகளுக்கு தமிழக, கர்நாடக அரசுகளின்பதில்களுடன் தற்போது மூன்றாவது முறையாக காட்டுக்குச் சென்றுள்ளார்.
புதன்கிழமை இரவு அவர் காட்டுக்குள் நுழைந்துள்ளதாக நக்கீரன் பத்திரிகைஇணையாசிரியர் காமராஜ் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டஅறிக்கையில், கோபால், நக்கீரன் அலுவலகத்தை புதன்கிழமை மாலை தொடர்புகொண்டார். வீரப்பனிடமிருந்து உத்தரவு கிடைத்து விட்டதாகவும், தான் காட்டுக்குள்பயணத்தைத் துவக்கி விட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த முறை வீரப்பனைச் சந்திப்பதில் எந்தவித தடையும் இருக்காது என்று தான்நம்புவதாக அவர் தெரிவித்தார். மேலும், விடுதலை குறித்த தகவல் ரேடியோ மூலம்கிடைக்கும் என்று நம்புவதால் ராஜ்குமார் உள்ளிட்டவர்களை மீட்பதில் சிக்கல்இருக்காது என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார் என்று காமராஜ் கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications