சென்னையில் 2.75 லட்சம் இன்டர்நெட் இணைப்புகள்
சென்னை:
சென்னை நகரில் கூடுதலாக 2.75 லட்சம் இன்டர்நெட் மற்றும் செல்போன் இணைப்புகள் வழங்க சென்னைத் தொலைபேசி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இத் தகவலை சென்னைத் தொலைபேசியின் தலைமைப் பொது மேலாளர் சி.வி. ராஜன் தெரிவித்தார். சென்னையில் புதன்கிழமை நடைபெற்ற சென்னைத்தொலைபேசியின் ஆலோசனை கமிட்டிக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:
வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்பத் துறையில் மக்களுக்குத் தேவையான அனைத்து தகவல் தொடர்பு வசதிகளையும் ஏற்படுத்தித் தர சென்னைத்தொலைபேசி அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளது.
அந்த வகையில் சென்னை நகர மக்களுக்காக கூடுதலாக 2.75 லட்சம் இன்டர்நெட் மற்றும் செல்போன் இணைப்புகளை வழங்க நடவடிக்கைமேற்கொண்டுள்ளது. 2000-2001-ம் ஆண்டில் மட்டும் 1.5 லட்சம் இணைப்புகள் வழங்கப்படும்.
வி.எஸ்.என்.எல். நிறுவனத்துடன் இணைந்து சென்னைத் தொலைபேசியும் இன்டர்நெட் வசதியை ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அடுத்த ஒருமாதத்துக்குள் இது அமல்படுத்தப்படும்.
செல்போனுக்கான தனி தொலைபேசித் தொடர்பகம் இந்த ஆண்டு இறுதிக்குள் அல்லது அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்துக்குள் ஏற்படுத்தப்படும். முதலில்4000 இணைப்புகளைக் கொண்டதாக இருந்த இணைப்பகம் இருக்கும்.
படிப்படியாக இந்த இணைப்பகத்தின் கொள்ளளவு 30 ஆயிரமாகவும் பிறகு 40 ஆயிரமாகவும் அதிகரிக்கப்படும். செல்போன் கட்டணங்கள் விரைவில்மாற்றி அமைக்கப்படும்.
சென்னை நகருக்குள் வயர்லெஸ் வசதியை ஏற்படுத்தவும் அதற்காக 5000 இணைப்புகள் கொண்ட தனி இணைப்பகமும் அடுத்த 6 மாதத்துக்குள்ஏற்படுத்தப்படும்.
இந்த ஆண்டில் ஜூலை 31-ம் தேதி வரை 35 ஆயிரம் இன்டர்நெட் மற்றும் செல்போன் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன என்றார் ராஜன்.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications