ஜப்பான் செல்லும் மாநகராட்சிப் பள்ளி மாணவி
சென்னை:
ஜப்பான் தூதரகம் நடத்திய பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற சென்னை மாநகராட்சிப் பள்ளி மாணவி ஸ்ரீலட்சுமி அடுத்த மாதம் ஜப்பான் செல்கிறார்.
சென்னை சைதாப்பேட்டை மாநகராட்சி பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் பிளஸ் 1 கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கும் மாணவி ஸ்ரீலட்சுமி.
சென்னையில் உள்ள ஜப்பான் தூதரகமும், ஏ.பி.டி. - ஏ.ஓ.டி.எஸ். தொசாக்கா எனும் ஜப்பான் நாட்டு நிறுவனம் இணைந்து நடத்திய பேச்சுப் போட்டியில்ஸ்ரீலட்சுமி பங்கேற்றார். பல கட்டங்களாக நடந்த இப்போட்டியின் இறுதிச் சுற்றில் "மக்கள் தொகையும் மாசுபடுதலும் என்ற தலைப்பில் ஸ்ரீலட்சுமி பேசிமுதலிடம் பெற்றார்.
முதலிடம் பெறும் மாணவி ஜப்பான் நாட்டுக்கு அழைத்துச் சென்று கவுரவிக்கப்படுவார் என்று ஏற்கனவே போட்டியாளர்கள் அறிவித்திருந்தனர். அதன்படிஸ்ரீலட்சுமியை அடுத்த மாதம் ஜப்பான் நாட்டுக்கு அழைத்துச் செல்கின்றனர்.
மிகப் பிரபலமான பள்ளிகள் நிறைந்த சென்னையில் மாநகராட்சி பள்ளி மாணவி ஒருவர் வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைத்துள்ளது குறித்து அப்பள்ளியின் துணைத்தலைமை ஆசிரியர் பாலசுப்ரமணியம் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், கடந்த 1998ம் ஆண்டு இதே ஜப்பான் நிறுவனம் நடத்திய போட்டியில் எங்கள் பள்ளி மாணவி கலையரசி வெற்றி பெற்றுஜப்பான் சென்று வந்தார். அதன் தொடர்ச்சியாக ஸ்ரீலட்சுமி செல்கிறார். இது மாநகராட்சி பள்ளிகளின் கல்வித் தரத்தை உலகுக்கு எடுத்துக் காட்டுகிறதுஎன்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications