கடத்தப்பட்ட பள்ளி மாணவன் சில மணி நேரங்களில் மீட்பு
மதுரை:
மதுரையிலிருந்து கடத்திச் செல்லப்பட்ட 15 வயது பள்ளி மாணவனை போலீஸார்மீட்டனர்.
மதுரை சிலைமான் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக். இவர் காமராஜர் சாலையிலுள்ளஒரு பள்ளியில் படித்து வருகிறார். புதன்கிழமை காலை பள்ளிக்குச் சென்றுகொண்டிருந்தபோது அவர் அருகே ஒரு ஜீப் வந்து நின்றது. ஜீப்பிலிருந்து இறங்கிய 2பேர் கார்த்திக்க்ை கட்டாயப்படுத்தி ஜீப்பில் ஏற்றிக் கொண்டு அங்கிருந்து தப்பினர்.
ஜீப் திருநகர் அருகே வந்தபோது, கார்த்திக் உதவி கேட்டு குரல் எழுப்பியுள்ளான்.இதைப் பார்த்த சாலையில் சென்று கொண்டிருந்தவர்கள் போலீசுக்குத் தகவல்கொடுத்தனர். உடனடியாக மதுரை ஊரக போலீஸார் ஜீப்பில் விரைந்தனர்.
செக் போஸ்ட் அருகே கடத்தல்காரர்கள் ஜீப் வந்தபோது அதை போலீஸார் தடுத்துநிறுத்த முயன்றனர். அப்போது போலீஸ் ஜீப்பை மோதிக் கொண்டு கடத்தல்காரர்கள்தப்பினர். போலீஸார் விடாது ஜீப்பில் அவர்களைத் துரத்திச் சென்றனர். சிறிது தூரம்சென்ற பிறகு ஜீப்பை மறித்து கடத்தல்காரர்களைப் பிடித்து, கார்த்திக்கை மீட்டனர்.
விசாரணையில், கடத்தல்காரர்கள் இருவரும் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்என்றும், ரூபாய் இரட்டிப்பு மோசடி செய்யும் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்றும்தெரிந்தது.
சிறுவன் கார்த்திக், கடத்தப்பட்ட சில மணி நேரங்களிலேயே மீட்கப்பட்டதுகுறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications