விக்கிரமசிங்கேவிற்கு சந்திரிகா பகிரங்க சவால்
கொழும்பு:
கொழும்புவில் என்னைக் கொல்ல விடுதலைப் புலிகள் திட்டமிட்டிருந்தது பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று எதிர்க்கட்சித் தலைவர் ரனில்விக்ரமசிங்கே பகிரங்கமாக அறிவிப்பாரா என்று இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்கா சவால் விட்டுள்ளார்.
தலைநகர் கொழும்புவில் கடந்த ஆண்டு டிசம்பர் 18-ம் தேதி நடந்த தேர்தல் பேரணியில் கலந்து கொண்ட அதிபர் சந்திரிகா குமாரதுங்கா மீது விடுதலைப்புலிகள் தாக்குதல் நடத்தினர். இதில் சந்திரிகாவுக்குப் பலத்த காயமேற்பட்டது.
இத் தாக்குதல் குறித்து எதிர்க்கட்சித் தலைவரும், ஐக்கிய தேசிய கட்சித் தலைவருமான ரனில் விக்ரமசிங்கேவுக்குத் முன்பே தெரியும் என்று அதிபர்சந்திரிகாவும், அவரது மக்கள் கூட்டணியும் குற்றம் சாட்டினர்.
ஆனால், இக் குற்றச்சாட்டை ரனில் விக்ரசிங்கே மறுத்தார். சந்திரிகா மீதான விடுதலைப் புலிகளின் தாக்குதல் பற்றி எனக்கு எதுவும் தெரியாதுஎன்று அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து யுவா மாகாணத்தில் புதன்கிழமை நடைபெற்ற கட்சி மாநாட்டில் சந்திரிகா கூறுகையில், விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததுரனில் விக்ரமசிங்கேவுக்கு முன்பே தெரியும்.
அது பற்றி தனக்குத் தெரியாது என்று ரனில் விக்ரசிங்கே பகிரங்கமாக அறிவிப்பாரா. அக் குற்றச்சாட்டு பொய்யானது என்றும் அவர்சொல்வாரா என்றார் சந்திரிகா.
விடுதலைப் புலிகளின் சதியில் மற்றொரு ஐக்கிய ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருக்கும் தொடர்பு உள்ளது. அவர் தொடர்ந்து புலிகளின்தலைமையுடன் பேச்சு நடத்தி வருகிறார்.
புலிகளின் தாக்குதலில் இருந்து நான் தப்பிவிட்டாலும், இப்போதும் எனது உயிருக்கு ஆபத்து உள்ளது. இருப்பினும், இலங்கையில் அமைதி ஏற்படவும்,எதிர்கால சந்ததியினர் அமைதியாக வாழவும் நான் பாடுபடுவேன்.
இலங்கையில் முழு அமைதி ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் எனது குறிக்கோள். இலங்கையில் அமைதி ஏற்படுவதை புலிகள் விரும்பவில்லை.
ஐக்கிய ஜனநாயகக் கட்சியும் புலிகளுடன் சேர்ந்து என்னை மக்கள் கூட்டணியின் தலைவர் பதவியிலிருந்து நீக்க சதித் திட்டம் தீட்டியுள்ளனர்.இல்லையென்றால், நான் அதிபராக வருவேன், சந்திரிகாவை பிரபாகரனிடம் ஒப்படைப்பேன் என்று ரனில் விக்ரமசிங்கேவால் எப்படி கூறமுடியும்.?
எனது தலைமையிலான மக்கள் கூட்டணி, எந்த ரகசியச் செயல்களிலும் ஈடுபடாது. விடுதலைப் புலிகள் தங்கள் ஆயுதங்களை ஒப்படைத்து சரணடையும் வரைஅவர்களுடன் எந்த விதமான பேச்சுவார்த்தையோ, ஒப்பந்தமோ செய்து கொள்ளமாட்டேன்.
இலங்கையில் பயங்கரவாதத்தை ஒழித்து முழு அமைதியை ஏற்படுத்தவேண்டும் என்பதுதான் எனது ஒரே குறிக்கோள் என்றார் சந்திரிகா.
யு.என்.ஐ.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications