தமிழகத்தில் நெல் கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூ. 20 அதிகரிப்பு
சென்னை:
தமிழ்நாட்டில் நெல் கொள்முதல் விலையை உயர்த்தி தமிழக முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
இந்த ஆண்டின் நெல் கொள்முதல் விலை, கடந்த ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட 20 ரூபாய்கூடுதலாக நிர்ணயம் செய்யப்பட்டு மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி 1.9.2000 முதல் கொள்முதல் செய்யப்படும் சாதாரண ரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு 510ரூபாய் என்றும், "ஏ கிரேடு ரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.540 என்றும் உயர்த்தி முதல்வர்ஆணையிட்டுள்ளார்.
தமிழகத்தில் காவிரி டெல்டா பகுதிகளில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நேரடிக்கொள்முதல் நிலையங்களிலும், இதர பகுதிகளில் உள்ள வட்டக் கிடங்குகளிலும் கொள்முதல்செய்யப்படும் நெல்லுக்கு இப் புதிய விலை நிர்ணயம் பொருந்தும்.
1.9.2000 முதல் கொள்முதல் செய்யப்படும் சாதாரண ரக நெல்லுக்கும், "ஏ கிரேடு ரகநெல்லுக்கும் இடைநிகழ் செலவாக குவிண்டால் ஒன்றுக்கு 35 ரூபாய் கூடுதலாக வழங்குவதற்கு தமிழகஅரசு ஏற்கனவே ஆணையிட்டுள்ளது.
அதன்படி பார்த்தால் சாதாரண ரக நெல் ரூ.545 என்றும், "ஏ கிரேடு ரக நெல் ரூ.575 என்றும்விலை நிர்ணயிக்கப்படுகிறது என்று அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications