பார்வதி ஷா மாமியாரின் மனு தள்ளுபடி
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரியில் மைத்துனரால் கற்பழித்துக் கொல்லப்பட்ட பார்வதி ஷா வழக்கில் 2ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்ட மாமியார் பத்மாவதி ஷா, தனதுதண்டனையை நிறுத்தி வைக்குமாறு தாக்கல் செய்திருந்த மனுவை நீதிமன்றம்தள்ளுபடி செய்தது.
கடந்த ஆண்டு புதுவை வைர வியாபாரி ரவி ஷாவின் மனைவியான பார்வதி ஷாஅவரது மைத்துனர் கமல் ஷாவால் கற்பழித்துக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில்கைதான கமல் ஷாவுக்குத் தூக்குத் தண்டனையும், சாட்சியை அழித்ததற்காக கமல்ஷாவின் தாய் பத்மாவதி ஷாவுக்கு இரண்டாண்டு கடுங்காவல் தண்டனையும் விதித்துசெவ்வாய்க்கிழமையன்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந் நிலையில் சென்னை உயர்நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்யும் வரை தனதுதண்டனையை நிறுத்தி வைக்குமாறு பத்மாவதி ஷா நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்திருந்தார். இந்த மனு வியாழக்கிழமையன்று விசாரணைக்கு வந்தது.
பத்மாவதி ஷாவின் வக்கீல் வாதாடுகையில், பத்மாவதி ஷாவுக்கு வழங்கப்பட்டுள்ளதண்டனை மூன்று வருட சிறைத் தண்டனையை விட குறைவாக இருப்பதால் அவர்ஜாமீனில் வெளிவரலாம். எனவே அவரது தண்டனையை நிறுத்தி வைக்க நீதிமன்றம்உத்தரவிட வேண்டுமென்று வாதாடினார்.
அரசு தரப்பு வக்கீல் இந்த சட்டம் குற்றவாளி ஜாமீனில் இருந்தால் மட்டுமே இதுபொருந்தும் என வாதாடினார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி குமார்பத்மாவதி ஷாவின் மனுவை தள்ளுபடி செய்தார்.
பின்னர் பத்மாவதி ஷாவின் வக்கீல் சவுந்தரராஜன் நிருபர்களிடம் பத்மாவதி ஷாவின்தண்டனையையும், கமல் ஷாவின் தண்டனையையும் எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்னும் ஒரு வார காலத்தில் மனு செய்யவிருப்பதாகக் கூறினார்.
இதற்கிடையே, பாண்டிச்சேரி முன்னாள் முதல்வரும், எதிர் கட்சித் தலைவருமானடி.ராமச்சந்திரன், தலைமறைவாக உள்ள பார்வதி ஷாவின் கணவர் ரவி ஷாவைவிரைவில் கண்டுபிடிக்கமாறு அரசை கேட்டுக் கொண்டுள்ளார்.
யு.என்.ஐ.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications