பிச்சைக்காரப் பெண்ணைக் கற்பழித்தவருக்கு 7 ஆண்டு சிறை
Subscribe to Oneindia Tamil
கோவை:
பிச்சைக்கார பெண்ணைக் கற்பழித்த 56 வயது முதியவருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் த ண்டனைவிதிக்கப்பட்டது.
கோவை சுண்டக்காத்தூரைச் சேர்ந்தவர் கருப்புசாமி (56). இவர் கூலி வேலை செய்து வந்த இவர் கடந்தசில ஆண்டுகளுக்கு முன்பு சித்திரைச் சாவடிப் பள்ளம் என்ற இடத்துக்குச் சென்றார்.
அங்கு குஞ்சம்மாள் என்ற பிச்சைக்காரப் பெண்ணைக் கற்பழித்துள்ளார். இது தொடர்பாக கருப்புசாமியைப்போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கை விசாரித்த கோவை இரண்டாவது கூடுதல் சார்பு நீதிபதி விமலா, பிச்சைக்காரப் பெண்ணைகற்பழித்த கருப்புசாமிக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்துதீர்ப்பளித்தார்.












Click it and Unblock the Notifications