"கோபாலால் ராஜ்குமாரை மீட்க முடியாது ...
சென்னை:
சந்தனக் கடத்தல் வீரப்பனால் கடத்தப்பட்ட கன்னட பிரபல நடிகர் ராஜ்குமாரைபோலீசாரால் மட்டுமே மீட்க முடியும் என வக்கீல் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
சந்தனக்கடத்தல் வீரப்பனால் பிரபல கன்னட நடிகர் ராஜ்குமார் ஆகஸ்ட் மாதம் 30-ம்தேதி இரவு காஜனூரில் உள்ள அவரது பண்ணை வீட்டிலிருந்து கடத்தப்பட்டார்.அவருடன் மேலும் மூவரும் கடத்தப்பட்டனர்.
ராஜ்குமாரை மீட்க வீரப்பன் விடுத்த கோரிக்கைகளை தமிழக, கர்நாடக அரசுகள்ஏற்றுக் கொண்டுள்ளன. ராஜ்குமாரை மீட்க அரசு தூதுவராக நக்கீரன் ஆசிரியர்கோபால் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார்.
சில வருடங்களுக்கு முன்பு வீரப்பனுடன் பேச்சு வார்த்தை நடத்தி அவனை திருத்திஅழைத்து வருவதாகக் கூறி காட்டுக்குள் சென்றார் வக்கீல் கிருஷ்ணசாமி. ஆனால்வீரப்பனிடம் பினைக் கைதியாக சிக்கி தப்பிப் பிழைத்து வந்தார். தற்போது அவர்அளித்துள்ள பேட்டியில் போலீஸாரால் மட்டுமே ராஜ்குமாரை மீட்க முடியும் என்றுகூறியுள்ளார்.
வீரப்பன், ஜெயலலிதா, தேவேகவுடா, நடிகர்கள் ராஜ்குமார், ரஜினிகாந்த் உட்படபலரை கடத்தப் போகிறான் என்றும் அவனுக்கு விடுதலைப் புலிகளுடனும் தொடர்புஉண்டு என்று மத்திய அரசுக்கு அறிக்கை கொடுத்திருந்தேன். இப்போது ராஜ்குமார்கடத்தப்பட்டுள்ளார்.
நான் கூறியவுடனேயே நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த நிலைதவிர்க்கப்பட்டிருக்கும். என் அறிக்கையை மத்திய மாநில அரசுகள் முக்கியமாககருதவில்லை. எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதன் விளைவே இது.
தமிழக முதல்வருடன் தொடர்பு உண்டு என பகிரங்கமாகவே வீரப்பன் கூறியுள்ளான்.அவனுக்கு பல அரசியல்வாதிகளுடனும் தொடர்பு உள்ளது.
அரசு தூதர் நக்கீரன் கோபாலால் ராஜ்குமாரை மீட்க முடியாது. போலீசாரால் மட்டுமேஅது முடியும். செஞ்சிலுவைச் சங்கம் போன்ற தொண்டு நிறுவனத்தினரைச்சேர்ந்தவர்களை அனுப்பி ராஜ்குமாரை மீட்க முயற்சிக்கலாம் என கிருஷ்ணசாமிகூறியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications