"ராஜ்குமார் கடத்தலால் வரி வசூலில் பாதிப்பில்லை
பெங்களூர்:
சந்தனக் கடத்தல் வீரப்பனால் கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்ட சம்பவத்தால் மாநிலத்தில் வரி வசூல் எந்த வகையிலும் பாதிக்கப்படவில்லைஎன்று கர்நாடக நிதித் துறை துணை அமைச்சர் எம். சிவன்னா தெரிவித்தார்.
பெங்களூரில் நிருபர்களிடம் வியாழக்கிழமை அவர் கூறியதாவது:
ராஜ்குமார் கடத்தலால் தியேட்டர்கள் மூடிக் கிடக்கின்றன. இருப்பினும், மாநிலத்தில், வர்த்தக வரி வசூல் எந்த வகையிலும் பாதிக்கப்படவில்லை.ஆனால், வரி வசூல் சற்று தாமதமாக நடைபெறுகிறது என்பது உண்மை.
இந்த ஆண்டில் ரூ. 6,100 கோடிக்கு வரி வசூல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வரி வசூலைத் தீவிரப்படுத்தும்படி அனைத்து வரி வசூல் துறையினருக்கும்உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வரி ஏய்ப்பைத் தடுக்க தொழிலதிபர்கள் வீடுகளில் சோதனை நடத்தப்படுவது தொடரும். ஆனால், சிறு தொழிலதிபர்கள்தான் இலக்காக வைத்து இச்சோதனை நடத்தப்படுவதாகவும், பெரிய தொழிலதிபர்களிடம் சோதனை நடத்தப்படுவதில்லை என்றும் கூறப்படும் குற்றச்சாட்டுக்கு ஆதாரமில்லை.
மாநில கருவூல நடவடிக்கைகளை முழுவதும் கம்ப்யூட்டர்மயமாக்கம் பணி அடுத்த 4 அல்லது 5 மாதங்களில் முடிக்கப்பட்டுவிடும் என்றார் சிவன்னா.
யு.என்.ஐ.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications