கலகலக்கப் போகிறது தேயிலை பிரச்சினை

Subscribe to Oneindia Tamil

கோவை:

நீலகிரி மாவட்ட தேயிலை விவசாயிகளின் பிரச்னை அரசியலாகிறது.

அடுத்து வரும் தேர்தலுக்கு இந்தப் பிரச்னையை ஆயுதமாக ஏந்த எதிர்க் கட்சிகள்தயாராகி வருகின்றன. நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயிகள் கடந்த மூன்று மாதகாலமாகத் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்தப் போராட்டத்தினால், நீலகிரி மாவட்டத்தின் பொருளாதாரம் மிகவும்பாதிப்படைந்தது. நீலகிரியில் கடந்த சீசனில் மலர்க் காண்காட்சி ரத்தானது. சீசனுக்குவந்து செல்லும் பயணிகளின் எண்ணிக்கை குறைந்தது.

விவசாயிகள் நடத்திய சாலை மறியலால் அதிகமான பாதிப்பு ஏற்பட்டது, பஸ்கள்எரிக்கப்பட்டன. பின்னர், இறுதியாக போலீசார் குவிக்கப்பட்டு பிரச்னை தடியடி வரைசென்றது.

பச்சைத் தேயிலையின் விலை கிலோ ரூ. 15 ஆக நிர்ணயிக்க வேண்டும் என்றவிவசாயிகளின் கோரிக்கையை அரசால் தீர்க்க இயலவில்லை. தேயிலை தொடர்பானவரிகளை அரசு குறைத்தது. பச்சைத் தேயிலை கிலோ ஒன்றிற்கு ரூ. 1.25 வரைமானியம் அளித்தது. இதனால், 5 ரூபாய்க்கு விற்ற தேயிலை, ரூ. 6.25 ஆக மாறியது.

தேயிலை விலை வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாகக் கூறப்படுவது தரமற்றத் தேயிலைமற்றும் கலப்படம் என்பது தான். கடந்த முறை நடந்த விவசாயிகளின் போராட்டம்,போலீஸ் தடியடி வரை சென்றது. இந்த தடியடிப் பிரச்னையாலும், உரிய நேரத்தில் தக்கநடவடிக்கை எடுக்கப்படாததாலும், மாவட்ட கலெக்டர் உடனடியாக மாற்றப்பட்டார்.

தற்போது சுப்ரியா சாகு மாவட்ட கலெக்டராகப் பொறுப்பேற்றுள்ளார். சுப்ரியா,மானியங்கள் உடனடியாக விவசாயிகளை சென்றடைய உரிய நடவடிக்கைகளைத்தீவிரமாக மேற்கொண்டு வருகிறார். ஆனால், இப்பிரச்னையை தேர்தல் வரை இழுத்துச்சென்று மக்களின் ஆதரவைப் பெற எதிர்க் கட்சிகள் கடும் முயற்சியை மேற்கொண்டுவருகின்றன.

பிர ச்னைகள் ஓயும்போது, மீண்டும் மக்களுக்கு நினைவுபடுத்தும் விதமாக அவைசெயல்படத் தொடங்கியுள்ளன. காங்கிரஸ் கட்சி ஏற்கனவே சோனியா காந்தியிடம்இப்பிரச்னையைக் கூறி, கோவை வந்த அவரிடம், பழங்குடியின பெண்களைமேடையில் ஏற்றி, ஆதரவு திரட்ட போட்டோக்களை எடுத்துக் கொண்டனர். இதில்,பிரபு முன்னிலை வகுத்தார்.

தற்போது இப்பிரச்னையை எதிர்க் கட்சிகள் மீண்டும் கையில் எடுக்கின்றன. செப்டம்பர்மாதம் 18ம் தேதி இப்பிரச்னை தொடர்பாக ஊட்டியில் மாபெரும் ஊர்வலம் நடத்தஎதிர்க்கட்சிகள்முடிவு செய்துள்ளன. அதற்கு முன்னாள் பிரதமர் தேவகவுடாவைஅழைத்து தலைமை தாங்க வைக்க ஜனதா தளம் முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக நடந்த அனைத்துக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில்அ.தி.மு.க., கம்யூனிஸ்ட், ஜனதா தளம், காங்கிரஸ், தமிழ் மாநில காங்கிரஸ் ஆகியவைகலந்து கொண்டன.

அதேசமயம், ஆளும் கட்சியில் உள்ள தி.மு.க.,எம்.எல்.ஏ.,க்கள், பா.ஜ.க. எம்.பி.,ஆகியோர் இதனை எப்படிக் கையாள்வது என்ற கவலையில் ஆழ்ந்துள்ளனர். அடுத்துவரும் தேர்தலில் இப்பிரச்னை எதிரொலிக்கும் என்பதால், போராட்டத்தை எதிர்க்கவும்முடியாமல், ஆதரிக்கவும் முடியாமல், தீர்க்கவும் முடியாமல் தவிக்கின்றனர்.

எதிர்க் கட்சிகள் கிளப்பியுள்ள இந்த போராட்டப் புயலின் விளைவு தேர்தல்முடிவுகளில் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+