வாஜ்பாயின் அமெரிக்க பயணம் 2 நாள் தள்ளிவைப்பு
வாஷிங்டன்:
மூட்டு வலி காரணமாக பிரதமர் வாஜ்பாய் தனது அமெரிக்க பயணத்தில் இரண்டுநாட்களை தள்ளி வைத்துள்ளார்.
செப்டம்பர் 5-ம் தேதி பிரதமர் புறப்படுவதாக முதலில் திட்டமிடப்பட்டிருந்தது.தற்போது 2 நாட்கள் தள்ளி, 7-ம் தேதிதான் பிரதமர் அமெரிக்கா கிளம்புகிறார். மூட்டுவலி காரணமாக பிரதமரின் பயணத்தில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
நியூயார்க் செல்லும் பிரதமர் வாஜ்பாய், தனது சான்பிரான்ஸிஸ்கோ பயணத்தை ரத்துசெய்துள்ளார். இருப்பினும், வாஷிங்டன் நிகழ்ச்சிகளில் எந்த மாற்றமும்செய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்படவில்லை.
அமெரிக்க அதிபர் கிளிண்டனின் அழைப்பை ஏற்று பிரதமர் வாஜ்பாய் அமெரிக்காசெல்கிறார். நியூயார்க்கில் நடைபெறவுள்ள ஐ.நா. சபையின் மில்லனியம் கூட்டத்திலும்வாஜ்பாய் கலந்து கொள்கிறார்.
வாஜ்பாய் பயண மாற்றம் குறித்து அமெரிக்க அரசுத் தரப்பில் கூறுகையில், பிரதமர்வாஜ்பாயின் மூட்டுக்களில் வலி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும்இதனால் இந்தியப் பிரதமரின் அமெரிக்க பயணம் பாதிக்கப்படாது என்றுநம்புகிறோம்.
இந்தப் பிரச்சினை குறித்து இதுவரை இந்திய அதிகாரிகளுடன் விவாதிக்கவில்லை.வாஷிங்டனுக்கு வரும் இந்திய வெளியுறவுத் துறைச் செயலாளர் லலித் மான்சிங்கும்,அமெரிக்க வெளியுறவுத் துறை செயலாளர் டாம் பிக்கரிங்கும் இதுகுறித்துவிவாதிப்பார்கள். வாஜ்பாயின் பயண விவரம் குறித்து இருவரும் விவாதித்து இறுதிசெய்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.
அமெரிக்காவில் சிகிச்சை:
இதற்கிடையே, அமெரிக்கா வரும் பிரதமர் வாஜ்பாய்க்கு அங்கு சிகிச்சைஅளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியூயார்க் நகரிலுள்ள மெளன்ட் சினாய் மருத்துவமனையைச் சேர்ந்த எலும்பு சிகிச்சைநிபுணர் வாஜ்பாய்க்கு சிகிச்சை தருவார். வாஜ்பாயின் மூட்டுக்களை அவர்பரிசோதித்து சிகிச்சை அளிப்பார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications