ஒரு வழியாய் சென்னை வந்தது கிருஷ்ணா வாட்டர்
சென்னை:
ஆந்திராவில் கண்டலேறு அணையில் இருந்து திறந்து விடப்பட்ட கிருஷ்ணா நதி நீர் தமிழக எல்லையை அடைந்தது. செப்டம்பர்2ம் தேதி முதல் சென்னை மக்களுக்கு "கிருஷ்ணா வாட்டர் கிடைக்கும்.
அடித்த அக்னி வெயிலில் சென்னை நகருக்கு தண்ணீர் தரக்கூடிய ஏரிகள் எல்லாம் காய்ந்து போயின. செங்குன்றம் ஏரியில் மட்டும்கொஞ்ச நஞ்சம் தண்ணீர் மீதமிருந்தது. அதையும் வீட்டுக் குழாய்கள் மூலம் வினியோகித்தால் கட்டுப்படி ஆகாது என்று கருதிலாரிகள் மூலம் தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.
லாரித் தண்ணீரும் சில நாட்களுக்கு தான் வரும் என்ற நிலையில் கடுமையான குடிநீர் பஞ்சத்தை எதிர்நோக்கியிருந்தது "திகிரேட்டர் சென்னை. எப்படி சமாளிக்கப் போகிறோமோ என்ற தவிப்பில் சென்னை கார்ப்பரேஷனும், மெட்ரோட வாட்டரும்"வருண பகவான் வருகைக்காக காத்திருந்தன.
இந்த நேரத்தில் ஆந்திராவில் மழை செம ஊத்து ஊத்தியதால் ஊரெல்லாம் வெள்ளக்காடு. ஆறுகள், ஏரிகள் எல்லாம் நிரம்பிவழிந்து வெளியேறிய தண்ணீரை கண்டலேறு அணைக்கு திருப்பி விட்டது ஆந்திர அரசு.
பெரிய மனசு வைத்து ஆந்திர அரசு செய்த இந்த நல்ல காரியத்தால் கண்டலேறு அணை ஓரிரு நாட்களில் நிரம்பியது. அந்தஅணையில் தேங்கிய தண்ணீரை தமிழகத்திற்கு தர வேண்டிய "கோட்டாப்படி உடனே தருமாறு தமிழக அரசு கேட்டது தான்தாமதம். அடுத்த நாளே கண்டலேறு அணை திறந்து விடப்பட்டது.
அங்கிருந்து புறப்பட்ட கிருஷ்ணா நீர் 150 கி லா மீட்டார் தூரம் பாய்ந்து வந்து புதன்கிழமை நள்ளிரவில் தமிழக எல்லையைஅடைந்தது. தமிழகத்தில் பூண்டி நீர்த் தேக்கத்தில் அந்த தண்ணீர் சேமிக்கப்படுகிறது.
கண்டலேறு அணையில் இருந்து வினாடிக்கு 200 கன அடி தண்ணீர் முதலில் திறந்து விடப்பட்டது. பின்னர் அது 400 கன அடியாகஉயர்த்தப்பட்டது. பூண்டிக்கு வரும் வழியில் வீணாகும் தண்ணீர் போக 300 கன அடி தண்ணீரை தேக்க முடியும் என்று தமிழகஅதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.
இங்கு தேங்கும் நீரை உடனடியாக செங்குன்றம் ஏரிக்கு அனுப்பவும், அங்கிருந்து சென்னை மக்களுக்கு கிருஷ்ணா நீரைவினியோகம் செய்யவும் தமிழக பொதுப்பணித் துறை திட்டமிட்டுள்ளது.
தற்போது கண்டலேறு அணையில் 8 டி.எம்.சிக்கும் மேல் தண்ணீர் உள்ளது. அதில் 2 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விடவே மூன்றுமாதங்கள் ஆகும். எனவே மூன்று மாதங்களுக்கு சென்னை குடிநீர் பிரச்னை தீரும். அதன் பின்னர் பருவ மழை கை கொடுத்துவிடும் என்கின்றனர் மெட்ரோ வாட்டர் அதிகாரிகள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications