அமெரிக்கா செல்ல விசா கேட்கிறார் காஸ்ட்ரோ
ஹவானா:
ஐக்கிய நாடுகள் சபையின் மில்லேனியன் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க விசா கேட்டு கியூபா அதிபர் ஃபிடெல் காஸ்ட்ரோவிண்ணப்பித்துள்ளார்.
கியூபா வெளியுறவுத் துறை இத் தகவலைத் தெரிவித்துள்ளது. ஆனால், இது குறித்து அமெரிக்க வெளியுறவுத் துறையிடமிருந்து மறுப்போ அல்லது உறுதிசெய்தோ தகவல் ஏதும் வெளியிடப்படவில்லை.
விசா கேட்டு காஸ்ட்ரோ விண்ணப்பித்தால், ஐக்கிய நாடுகளுடன் செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தின் கீழ் அமெரிக்காவுக்குள் நுழைய அனுமதிப்போம் என்றுஅமெரிக்க வெளியுறவுத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் சபையின் மில்லேனியம் மாநாடு அடுத்த வாரம் ஐ.நா. சபையின் தலைமையகத்தில் நடைபெற உள்ளது. இதில், ஐ.நா. சபையில் உறுப்பினராகஉள்ள 155 நாடுகளின் அதிபர்களும், பிரதமர்களும் மற்றும் அதிகாரிகளும் கலந்து கொள்கின்றனர்.
இக் கூட்டத்தில் கலந்து கொள்ள விரும்பும் உலக நாடுகளின் தலைவர்களுக்கு அமெரிக்காவில் நுழைய விசா வழங்கவேண்டும் என்று அமெரிக்காவைஐக்கிய நாடுகள் சபை கேட்டுக் கொண்டது.
அக் கோரிக்கையை ஏற்று ஐ.நா. சபை மாநாட்டில் கலந்து கொள்ள வரும் தலைவர்களுக்கு விசா வழங்க அமெரிக்காவும் சம்மதித்துள்ளது என்பதுகுறிப்பிடத்தக்கது.
ஐ.நா. மாநாட்டில் வெளியுறவுத் துறை அமைச்சர் பிலிப் பெரெஸ் ரோக், தேசிய சட்டப்பேரவைத் தலைவர் ரிகார்டோ அலார்கான் ஆகியோருடன் அதிபர்காஸ்ட்ரோ கலந்து கொள்வார் என்று கியூபா வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.
அப்படி அதிபருக்கு விசா கிடைக்காதபட்சத்தில் வெளியுறவுத் துறை அமைச்சர் பிலிப் பெரெஸ் ரோக், ஐ.நா. மாநாட்டில் கலந்து கொள்வார் என்றும்கியூபா வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.
கியூபாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே கடந்த பல ஆண்டுகளாக பனிப்போர் நடந்து வருகிறது என்பதும், 1995-ம் ஆண்டுக்குப் பிறகுஅமெரிக்காவுக்கு கியூபா அதிபர் காஸ்ட்ரோ சென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications