அரசியல் நாகரீகம் குறைந்து வருகிறது .. இளங்கோவன்

Subscribe to Oneindia Tamil

கரூர் :

தமிழத்தில் அரசியல் நாகரீகம் குறைந்து வருகிறது என்று காங்கிரஸ் தலைவர்ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.

கரூர் எம்.எல்.ஏ. வாசுகி முருகேசன் இல்ல திருமணத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கலந்து கொண்டு பேசினார்

அவர் பேசுகையில், இல்லறம் புகுந்துள்ள மணமக்கள், வீட்டிற்கும், நாட்டிற்கும் பயன்உள்ளவர்களாக திகழ வேண்டும். மணமகளின் தந்தையோ காங்கிரசைச் சேர்ந்தவர்.இவர்கள் இணைந்துள்ளதை பார்க்கும் போது காங்கிரசும், தி,மு.க.வும் இணைந்துவிட்டதாகஎண்ணிக் கொள்ளலாம்.

அரசியல் நாகரீகம் கருதி திருமண மேடையில் நான் அரசியல் பேசுவது கிடையாது.ஆனால் சமீப காலமாக தமிழ் நாட்டில் ஒரு மோசமான சூழ்நிலை நிலவி வருகிறது.

ஒரு சிலர் அரசியல் ரீதியாக எங்களை விமர்சிக்காமல், தாயைவிட்டும், நாயை விட்டும்விமர்சிப்பது வேதனையாக உள்ளது என்றார் இளங்கோவன்.

இளங்கோவனின் தாய், சுலோசனா சம்பத், அ.தி.மு.க. மகளிர் அணித் தலைவி. அவர்மூலமாகவே சமீப காலமாக இளங்கோவனுக்கு எதிராக அதிமுக தரப்பிலிருந்துஅறிக்கைகள் வந்து கொண்டிருப்பதால், இப்படி வருத்தப்பட்டார் இளங்கோவன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+